தினமும் நாம் குறைந்தது 20 நிமிடங்களாக சூரிய ஒளிபடும்படி நிற்க வேண்டும். இப்படி செய்தால் நமது உடலில் வைட்டமின் டி உற்பதியாக உதவும். இந்நிலையில் வைட்டமின் டி மட்டுமல்ல, நல்ல உறக்கம், நல்ல சருமம், வலுவான சதைகள், வலுவான எலும்பு, நோய் எதிர்ப்பு சக்தி, குடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
இந்தியாவைப்போல் 12 மணி நேரம் வெயில் இருக்கும் இடங்களில் 22 முதல் 30 நிமிடங்கள் வரை நாம் வெயிலில் நிற்கலாம். குறிப்பாக அதிகாலை, மாலை வெயில்தான் சரியாக இருக்கும். காலை 10 மணி முதல் 4 மணி வரை உள்ள வெயில் மிகவும் பலமாக இருப்பதால், நமது சருமம் சூரியக் கதிர்களால் பாதிக்கப்படும். அதிக வெயில் இருக்கும்போது நாம் முகத்தை மூடுவது அல்லது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.
டஸ்கி சரும் உடையவர்கள் 30 நிமிடங்கள்வரை வெயிலில் நிற்க வேண்டும். இவர்கள் உடலில் உள்ள அதிக மெலனின் சூரிய ஒளியை மெதுவாக உள்வாங்கும். குளிர் ஆன நாடுகளில் அல்லது இடங்களில் 2 முதல் 3 மணி நேரம் வரை நாம் வெயிலில் நிற்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“