தினமும் ஒரு ஆப்பிள் நல்லது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் நாம் ஆப்பிள், தேங்காய் சாலடை காலை உணவாக எடுத்துகொள்வது சரியாக இருக்கும். இது ஒரு நல்ல காலை உணவாக இருக்கும். ஒரு நாள் முழுவதும் நமக்கு தேவையான சக்தியை இது கொடுக்கிறது.
தேவையான பொருட்கள்
1 ஆப்பிள் துருவியது
1 கப் மாதுளை
½ கப் துருவிய தேங்காய்
எலுமிச்சை சாறு
½ ஸ்பூன் மிளகு பொடி
½ ஸ்பூன் காய்ந்த மாங்காய் பொடி
செய்முறை
இவை எல்லாவற்றையும் சேர்த்து கலந்து எடுத்துகொள்ள வேண்டும்.
இந்நிலையில் இது குடல் நலனுக்கு உதவியாக இருக்கும். தேங்காயில், புரத சத்து, நார்சத்து உள்ளது. இதில் இரும்பு சத்து, மான்கனீஸ், காப்பர், மெக்னிஷியம் உள்ளது. இவை கொலஜன் உற்பத்தியை அதிகரிக்கும், ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கும்.
இதுபோல ஆப்பிளில் நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. பொட்டாஷியம், உள்ளது. குடலில் உள்ள நல்ல பேக்ட்ரீயாவிற்கு இது உணவளிக்கிறது. இது மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. மாதுளையில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து உள்ளது.
Read in english