எல்லா கடைகளிலும் வாழைப்பழத்தை ஏன் தொங்க விடுகிறார்கள் என்று என்றாவது நாம் யோசித்தது உண்டா? சரி ஏன் அப்படி வாழைப்பழத்தை தொங்க விடுகிறார்கள் என்று பார்ப்போம்.
வாழைப்பழத்தின் பயன்கள்:
வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மெக்னீசியம் போன்றவை அடங்கி உள்ளன. ஒரே ஒரு வாழைப்பழத்தில் மனித உடலில் சக்திவாய்ந்த எலும்பு, தசைகளை உற்பத்தி செய்ய உதவுகிறது.
இந்த வைட்டமின் சி, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இது மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வைட்டமின் பி6 கொடுக்கிறது. செரிமான ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களான நார்ச்சத்துக்களும் இதில் அடங்கி உள்ளன.
ரத்த அழுத்தத்தை சீராக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை காக்கவும், வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் உதவுகிறது.
இன்னும் நிறைய சத்துக்களும், தாதுக்களும், வாழைப்பழத்தில் உள்ளன. குடல் இயக்கங்களை ஊக்குவித்து, குடல் பாதுகாப்புக்கு இந்த பழங்கள் உதவுகின்றன.அஜீரணம், செரிமானம் உள்ளிட்ட வயிறு கோளாறுகளை சரி செய்யவும் உதவுகிறது. எனவே இதனை தினசரி ஒன்றோ அல்லது வாரத்தில் இரு முறையோ சாப்பிடலாம்.
அதிகம் எடுத்து கொள்ள கூடாது. அதுவும் மயக்கம், தலைவலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் மேலும் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
காரணம்: கடைகளில் எப்பொழுதும் வாழைப்பழத்தை தொங்க விட்டு வைப்பார்கள் அதற்கான காரணம் என்ன என்று இப்போது தெரிந்து கொள்வோம்.
சிலர் பழம் வெயிலில் கருக்காமல் இருப்பதற்கு அடிப்பட்டால் சேதாரம் ஆகாமல் இருப்பதற்கு கடைகளில் தொங்க விடுவதாக கூறுவார்கள் ஆனால் உண்மை அது அல்ல.
உண்மையிலேயே வாழைப்பழத்தை கடைகளில் தொங்க விட்டு வைப்பதற்கான காரணம், வாழைப்பழத்தில் எத்திலீன் என்கிற கேஸ் இருக்கும் அந்த கேஸ் ப்ரொடியூஸ் ஆவதால் தான் பழம் பழுக்க ஆரம்பிக்கிறது.
எனவே வாழைப்பழத்தை கீழே வைத்திருந்தால் ஒரே இடத்தில் அந்த எத்திலீன் கேஸ் வெளியாகி ஒரு சில பழங்கள் மட்டும் பழுக்கும். ஆனால் அதை தொங்க விட்டு வைத்திருந்தால் கேஸ் சமமாக எல்லா இடங்களிலும் வெளியாக்கி அனைத்து பழங்களும் பழுக்க ஆரம்பிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“