பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? மனிதர்களுக்கு ஏன் ஷாக் அடிக்கிறது?

உயர்மின் அழுத்தக் கம்பிகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் எந்தவித பயமும் இன்றி சாதாரணமாக அமர்ந்திருப்பதை நாம் தினமும் பார்க்கிறோம். அவற்றின் கால்களுக்குக் கீழே அபாயகரமான மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தாலும், அவை எவ்வித பாதிப்புமின்றி அமர்ந்திருக்கும்.

உயர்மின் அழுத்தக் கம்பிகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் எந்தவித பயமும் இன்றி சாதாரணமாக அமர்ந்திருப்பதை நாம் தினமும் பார்க்கிறோம். அவற்றின் கால்களுக்குக் கீழே அபாயகரமான மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தாலும், அவை எவ்வித பாதிப்புமின்றி அமர்ந்திருக்கும்.

author-image
WebDesk
New Update
electrocuted

பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? மனிதர்களுக்கு ஏன் ஷாக் அடிக்கிறது?

உயர்மின் அழுத்தக் கம்பிகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் எந்தவித பயமும் இன்றி சாதாரணமாக அமர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம். அவற்றின் கால்களுக்குக் கீழே அபாயகரமான மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தாலும், அவை எவ்வித பாதிப்புமின்றி இருப்பதைப் பார்க்கும் போது, பயிற்சி பெறாத கண்களுக்கு இது மாயாஜாலம் போலத் தோன்றும். சிறு வயது முதலே மின்சாரத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாம் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பறவைகளுக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு? இதற்கான விடை, இயற்பியல், உயிரியலுக்கு இடையிலான ஒரு சுவாரஸ்யமான தொடர்பில் அடங்கியுள்ளது. ஒரு பறவை உயர்மின் அழுத்தக் கம்பியில் அமரும்போது என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வோம்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment

பறவைகளுக்கு ஏன் மின் அதிர்ச்சி ஏற்படுவதில்லை என்பதற்கான அடிப்படைக் காரணம், மின்சாரம் குறித்த எளிய தத்துவத்தில் உள்ளது: மின்னழுத்தத்தில் (Voltage) வேறுபாடு இருந்தால்தான் ஒரு கம்பி வழியாக மின்சாரம் பாயும். ஒரு பறவை மின் கம்பியில் அமரும்போது, அதன் இரு கால்களும் ஒரே மின்னழுத்த நிலையில் கம்பியைத் தொடுகின்றன. பறவையின் கால்கள் தொடும் புள்ளிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க மின்னழுத்த வேறுபாடு இல்லை. இதனால், பறவையின் உடல் வழியாக மிகக் குறைவான மின்சாரமே பாய்கிறது. பறவைகள் மின் கம்பிகளில் மின்சாரம் தாக்கி இறப்பதில்லை, ஏனெனில் அவை முழுமையான மின்சுற்றை (Electrical Circuit) உருவாக்கவில்லை. அதாவது, உயர்மின் அழுத்தத்திலிருந்து குறைந்த மின்னழுத்தத்திற்கு மின்சாரம் பாய்வதற்கு அவை பாதையை உருவாக்குவதில்லை. அவற்றின் சிறிய அளவு, கால்களுக்கு இடையிலான குறைந்த தூரம் மற்றும் தரையிலிருந்து அவை தனிமைப்படுத்தப்பட்டிருப்பது ஆகியவை இணைந்து அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

மனிதர்களுக்கு மின் அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?

மின்சார மூலங்களுடன் நாம் தொடர்பு கொள்ளும்போது, பொதுவாக பூமிக்கு தொடர்பு (Grounding) ஏற்படுகிறது. இதன் மூலம் மின்சார மூலத்திற்கும் பூமிக்கும் இடையே பாதை உருவாகிறது. அதாவது, ஒருவர் உயர்மின் அழுத்தக் கம்பியைத் தொடும்போது, மின்சாரம் அவர்களின் உடல் வழியாகப் பாய்ந்து, பூஜ்ஜிய மின்னழுத்தத்தில் இருக்கும் பூமிக்குள் வெளியேற்றப்படுகிறது. இந்த அதிகப்படியான மின்னழுத்த வேறுபாடு, மனித உடலின் வழியாக அதிக அளவு மின்சாரம் பாய வழிவகுக்கிறது, இது ஆபத்தானதாக மாறுகிறது.

பறவைகளுக்கு மின் அதிர்ச்சி எப்போது ஏற்படும்?

துரதிர்ஷ்டவசமாக, பறவைகளுக்கும் சில சமயங்களில் மின் அதிர்ச்சி ஏற்படலாம். இது ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட காரணங்களால் நிகழலாம். ஒரு பெரிய பறவை, கழுகு அல்லது கொக்கு போன்றது, அதன் சிறகுகளை விரித்து ஒரே நேரத்தில் வெவ்வேறு மின்னழுத்தங்களைக் கொண்ட 2 வெவ்வேறு மின் கம்பிகளைத் தொட்டால், பறவையின் உடல் வழியாக கம்பிகளுக்கு இடையே மின்சாரம் பாய ஒரு பாதையை உருவாக்குகிறது. இது ஆபத்தானதாக மாறலாம். ஒரு பறவை மின் கம்பியையும், அதே நேரத்தில் தரையுடன் இணைக்கப்பட்ட ஏதாவது ஒன்றையும் தொட்டால், அது மனிதர்கள் எதிர்கொள்ளும் அதே ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. மின் கம்பத்திற்கும் தரையிறக்கப்பட்ட உபகரணத்திற்கும் இடையே, அல்லது வெவ்வேறு மின் கட்டங்களைக் (phases) கொண்ட 2 கம்பிகளுக்கு இடையே பறவைகள் இணைப்பை ஏற்படுத்தினால், மின் அதிர்ச்சி ஏற்படலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: