கொட்டாவி ஏன் வருது? அருகில் இருப்பவருக்கும் வர காரணம் என்ன? டாக்டர் கார்த்திகேயன் விளக்கம்
நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? நாம் கொட்டாவி விடும்போது, அதைப் பார்க்கிற மற்றொருவர் ஏன் கொட்டாவி விடுகிறார்? இதற்குப் பதில் தெரியுமா? ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கிறது? இதைப் பற்றி எல்லாம் இந்தப் பதிவில் காணலாம்.
நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? நாம் கொட்டாவி விடும்போது, அதைப் பார்க்கிற மற்றொருவர் ஏன் கொட்டாவி விடுகிறார்? இதற்குப் பதில் தெரியுமா? ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கிறது? இதைப் பற்றி எல்லாம் இந்தப் பதிவில் காணலாம்.
கொட்டாவி ஏன் வருது? அருகில் இருப்பவருக்கும் வர காரணம் என்ன? டாக்டர் கார்த்திகேயன் விளக்கம்
நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? நாம் கொட்டாவி விடும்போது, அதைப் பார்க்கிற மற்றொருவர் ஏன் கொட்டாவி விடுகிறார்? இதற்குப் பதில் தெரியுமா? ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கிறது? இதைப் பற்றி எல்லாம் மருத்துவர் கார்த்திகேயன் கூறிய தகவல்களைப் இந்தப் பதிவில் காணலாம்.
Advertisment
பொதுவாக, நமக்கு சலிப்பாக இருக்கும்போது கொட்டாவி விடுகிறோம் என்று சொல்வார்கள். ஆனால் அதைவிட முக்கியமாக, குளிர்காலத்தில் கொட்டாவி விடுவது குறைவு. ஆனால், கோடை காலத்தில் கொட்டாவி விடுவது அதிகம். ஏனென்றால் கோடை காலத்தில் மூளை சூடாகிறது. அதனால், நாம் கொட்டாவி விடும்போது உள்ளிழுக்கிற ஆக்சிஜன், மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூளையைக் குளிர்விக்கிறது. ஆக, மூளை குளிர்ச்சி அடைவதற்காக கொட்டாவி ஏற்படுகிறது.
நாம் மிகவும் சலிப்பாக இருக்கும்போது, அன்றைய தினம் நிறைய வேலை செய்து சோர்வாக இருக்கும்போது, நம் உடம்பு நம்மைத் தயார்படுத்த முயற்சிக்கிறது. நாம் வாயை அகலமாகத் திறந்து கொட்டாவி விடும்போது, முதலாவதாக நுரையீரல் விரிவடைகிறது, ரத்த ஓட்டம் அதிகரித்து அதிக ஆக்சிஜன் உள்ளே செல்கிறது. 2-வது, நம் முகத்தில் உள்ள தசைகள் விரிகின்றன. இது, நாம் சோர்வாகவோ அல்லது தூக்க கலக்கத்திலோ இருந்தாலும், நம்மை சுறுசுறுப்பாக மாற்ற உதவுகிறது என்று சொல்கிறார்கள்.
நாம் கொட்டாவி விடும்போது அருகில் இருக்கும் மற்றொருவர் ஏன் கொட்டாவி விடுகிறார்? இந்தக் கேள்விக்கும் பதில் இருக்கிறது. இது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சியில், ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து யார் கொட்டாவி விடுகிறார்கள் என்று ஆராய்ந்தார்கள். எல்லோரும் கொட்டாவி விடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே அடுத்தவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து கொட்டாவி விடுகிறார்கள். ஏன்? தெரியுமா?
Advertisment
Advertisements
முக்கியமாக, 'எம்பதி' (Empathy) என்று சொல்லக்கூடிய விஷயம் இல்லாதவர்கள் கொட்டாவி விடமாட்டார்கள் என்று கண்டுபிடித்தார்கள். எம்பதி என்றால் என்ன? உதாரணத்திற்கு, ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு, 50,000 அல்லது 1,00,000 ரூபாய் நஷ்டம் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அப்போது, "ஐயோ, அவருக்கு இவ்வளவு கஷ்டம் ஏற்பட்டுவிட்டதே" என்று அவர்களுடைய நிலையில் இருந்து யோசித்து, அந்தத் துயரத்தை நாமும் உணர வேண்டும். அப்படி உணர்ந்தால்தான், "பரவாயில்லை, பணம் போனால் போகட்டும், உயிர் பத்திரமாக இருக்கிறதே" என்று அவர்களை ஆறுதல்படுத்த முடியும். இப்படி அடுத்தவரின் துன்பத்தை தன் துன்பமாக நினைத்து ஆறுதல் சொல்பவர்களுக்கு எம்பதி இருக்கிறது. இது பரிதாபமோ, இரக்கமோ அல்ல.
அடுத்தவர் துன்பத்தைக் கண்டு யார் ஒருவர் வருந்துகிறாரோ, அந்த குணம் உள்ளவர்கள்தான், இன்னொருவர் கொட்டாவி விடுவதைப் பார்க்கும்போது கொட்டாவி விடுகிறார்கள். இந்த எம்பதி இல்லாதவர்கள், "அவனுக்கு விபத்து நடந்தால் நமக்கென்ன?" என்று நினைப்பவர்கள், கொட்டாவி விடமாட்டார்கள். இது ஒரு ஆராய்ச்சி முடிவு. ஆனால், இதற்காக அடுத்தவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து நீங்களும் கொட்டாவி விட்டால், நீங்கள் சைக்கோபாத் (psychopath) என்று அர்த்தமல்ல. இது ஒரு ஆராய்ச்சி முடிவு என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.