கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் இரண்டாவது ஓயாத நிலையில், தடுப்பூசி போடுவதில் நம்மிடையே நல்ல போட்டி உள்ளது. “இந்தியாவில், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி 3 வார இடைவெளியில் கொடுக்கப்படுகிற ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு-டோஸ் தடுப்பூசி ஆகும். இது 91 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளது” என்று புதுடெல்லியின் துவாரகா மணிப்பால் மருத்துவமனையின் தொற்று நோய் சிகிச்சை ஆலோசகர் டாக்டர் அங்கிதா பைட்யா தனது கருத்துகளைப் பகிருந்துகொண்டார்.
தற்போது உரிமம் பெற்ற தடுப்பூசிகளான கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்று கண்டறியப்பட்டுள்ளது. கோவிஷீல்டு கிட்டத்தட்ட 70-90 சதவிகித செயல்திறனைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கோவேக்ஸின் 81 சதவிகித செயல்திறனைக் காட்டுகிறது. அதாவது 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால், அவர்களில் 70-90 பேருக்கு அறிகுறியில்லாத கோவிட் நோய் இருக்காது என்று டாக்டர் அங்கிதா பைட்யா விளக்குகிறார்.
தற்போதைய தொற்று பரவல் கோவிட் வைரஸின் திரிந்த உருமாற்றத்தால் ஏற்பட்டுள்ளது. முந்தைய தொற்றைப் போல, தற்போதைய வைரஸ் திரிபுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருக்காது. இதனால்தான், தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள்
“தடுப்பூசி போடுவது மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகளையும், வீட்டிலேயே குணமடைவதற்கான அதிக வாய்ப்புகளுடன் ஆக்ஸிஜன் அளிப்பதற்கான தேவையையும் குறைக்கும்” என்று டாக்டர் அங்கிதா பைட்யா கூறுகிறார்.
தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு அறிகுறியுடன் கோவிட் தொற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக பரிந்துரைக்கப்படுகிறது. “இந்த தரவு புள்ளிவிவர முக்கியத்துவத்திற்காக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.” என்று கூறினார்.
தொற்று பரவல் சங்கிலியை உடைக்க உதவுகிறது
தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் வைரஸை செயலியழக்கச் செய்யக்கூடிய ஆன்டிபாடிகளை உருவாக்கி, தொற்று பரவும் சங்கிலியை உடைக்கலாம். இது குறிப்பிட்ட அளவு மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட அதற்கான ஆன்டிபாடிகளை உருவாக்கியதும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
“தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்குப் பிறகு விரைவாக குணமடைய முடியும்” என்று டாக்டர் அங்கிதா பைட்யா கூறுகிறார்.
தடுப்பூசி போட்ட பிறகு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில எளிய குறிப்புகலை டாக்டர் அங்கிதா பைட்யா பகிர்ந்து கொள்கிறார். “உடலில் நீர்ச்சத்து இருக்க நாள் முழுவதும் போதுமான வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும். குறிப்பாக யோகா பயிற்சி, பிராணயாமா மற்றும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். பிராணயாமா நமது நுரையீரல் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.” என்று கூறினார்.
எப்போதும் வெளிச்சமான இடத்தில் இருங்கள். சூரிய ஒளியை எடுத்துக்கொள்ளுங்கள். எளிதில் ஜீரணிக்கக்கூடிய மற்றும் சத்தான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். துரித உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் போதுமான அளவும் நன்றாக உறங்குங்கள்.
மிக முக்கியமாக, ஒவ்வொருவரும் சுகாதாரத்தை பேணுங்கள். சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தபட்சம் 20 விநாடிகள் கைகளைக் அடிக்கடி கழுவுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். வீட்டிலும் வெளியே செல்லும்போதும் முககவசம்/ இரட்டை முகக்கவசம் அணிந்துகொண்டு இருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.