நமது உணவு மற்றும் உடலின் இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதன் காரணமாக உடலில் கீல்வாதம் உருவாவதற்கான அபாயம் அதிகரிக்கும்.
அந்த வகையில், ப்யூரின், பிரக்டோஸ் மற்றும் ஆல்கஹால் அதிகமாக உள்ள உணவுகள் கீல்வாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.
பிரக்டோஸ் என்பது பழத்தில் காணப்படும் சர்க்கரை ஆகும். இந்த சர்க்கரை கொண்டு செய்யப்படும் இனிப்பு பொருள்கள் கீல்வாதத்திற்கான அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பவர்களை காட்டிலும், அதிக எடையை கொண்டவர்களிடையே கீல்வாதம் அதிகமாக இருப்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது.
கீல்வாதம் பெண்களை விட ஆண்களை அதிகமாக பாதிக்கின்றன. ஏனெனில் இயற்கையாகவே பெண்களுக்கு உடலில் யூரிக் அமிலம் மிக குறைவாகவே இருக்கும்.
மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு யூரிக் அமிலத்தின் அளவு ஆண்களின் அளவு இருக்கும். மற்ற நேரங்களில் பெண்களுக்கு இந்த அமிலம் குறைவாக இருப்பதால் கீல்வாதம் நோய் ஆண்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.
சிறுநீரக நோய், நீரிழிவு நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை உடலில் கீல்வாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.
கீல்வாதத்திற்கு பரம்பரை தொற்று உண்டு. அதாவது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது கீல்வாதம் இருப்பது கண்டறியப்பட்டால் உங்களுக்கும் கீல்வாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
சில ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் உணவுக்கும் யூரிக் அமில சுரப்பிக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டறிந்துள்ளன. ஒரு ஆய்வில் தாவர உணவுகள் மூலம் சிறுநீரின் பி.எச் அளவை குறைக்க முடியும் என கண்டறிய பட்டு உள்ளது.
சித்த மருத்துவர் முத்துக்குமார்
9344186480
சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil