Advertisment

இளைஞர்களை தாக்கும் பக்கவாதம்: தப்பிப்பது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களும் பக்கவாத பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பாதிப்பு 40 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களிடம் அதிகரித்து காணப்படுகிறது.

author-image
WebDesk
New Update
lifestyle

கட்டுரையாளர் பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் நரம்பியல் துறையின் தலைவரும் மூத்த மருத்துவருமான ஆர். சிவக்குமார் ஆவார்.

பக்கவாதம் என்பது பெரியவர்களை தாக்கும் ஒரு நோயாகும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பிரச்னை இளைஞர்கள் மத்தியிலும் காணப்படுகிறது.

அதாவது 45 வயதுக்கு உள்பட்ட நபர்களில் பாதிப்பு 10 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என ஆய்வுகள் மேற்கொள் காட்டுகின்றன.

Advertisment

பொதுவாக இந்தப் பிரச்னைக்கு சில பாரம்பரிய ஆபத்து காரணிகளும் உள்ளன. அதில், அரித்மியா, நீரிழிவு நோய், உடல் பருமன், குடிப்பழக்கம், உடல் உழைப்பின்மை, புகைப்பிடித்தல் மற்றும் இதயப் பிரச்னைகளும் இதற்கு காரணிகளாக அமைந்துவிடுகின்றன.

தற்போது இந்தப் பட்டியலில் தூக்கமின்மை, மனச்சோர்வு, அனஅழுத்தம், ஒற்றை தலைவலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணிகளும் இணைந்துள்ளன.

வெப்ப தாக்கம் (1)

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களில் 40-50 சதவீதம் வரை இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் மாசுபாடும் பக்கவாதத்திற்கான வளர்ந்து வரும் காரணிகளாக அடையாளம் காணப்படுகின்றன.

மன அழுத்தம் எப்படி பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது?

தீவிர உளவியல் அழுத்தம் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணியாக அமைந்துவிடுகிறது. இது உடலில் அதிக அளவில் ஹார்மோன் சுரக்க தூண்டுகிறது.

இதனால், உடலில் பல அழற்சி எதிர்வினைகள் ஏற்படுகின்றன. இரத்த நாளங்களின் புறணியை அழித்து, கால்சியம் படிவு போன்ற அசாதாரணங்களுக்கு வழிவகுக்கிறது.

ஹீட்ஸ்ட்ரோக்

மேலும், பிளேட்லெட் செயல்படுத்துதல் மற்றும் திரட்டுதல் ஆகியவற்றை தூண்டுவதன் மூலம் இரத்த நாளங்களில் உறைதல் உருவாகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாடு எப்படி பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது?

இதில், மாசுபட்ட அல்லது சுற்றுப்புற காற்று நானோ துகள்கள், கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, தரை மட்ட ஓசோன் மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

அழுக்கு காற்றை நாம் சுவாசிக்கும்போது, சிறிய துகள்கள் நமது நுரையீரலை வீக்கமடையச் செய்து, நமது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, நமது இதயம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கலாம்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Why is stroke a new epidemic among young adults? Are stress and pollution to blame?

மாசுபட்ட காற்றில் உள்ள சில மிகச் சிறிய துகள்கள் நுரையீரலின் தடையை கடந்து நேரடியாக நமது இரத்த ஓட்டத்தில் சேரலாம்.

இந்த துகள்களை சுவாசிப்பது அல்லது அவை ஏற்படுத்தும் நுரையீரல் அழற்சி நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம்.

பக்கவாதத்தின் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது?

  1. முக பலவீனம், முகத்தின் ஒரு பக்கம் திடீரெனத் தொங்குதல் அல்லது ஒரு பக்கச் சிரிப்பு.
  2. திடீரென்று பேச இயலாமை அல்லது ஒழுங்கற்ற பேச்சு.
  3. ஒருங்கிணைப்பு சிக்கல்கள் மற்றும் நிலையற்ற இயக்கங்கள்.
  4. மங்கலான பார்வை அல்லது பார்வைக் குறைவு
  5. மூட்டு பலவீனம், கைகால்களை நகர்த்துவதில் சிரமம், குறிப்பாக கைகள்.
  6. ஒரு சில சந்தர்ப்பங்களில், தலைச்சுற்றல், மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல்.

உயிருக்கு உலை வைக்கும் பக்கவாதம்… வராமல் தடுக்க 7 எளிய டிப்ஸ்!

பக்கவாதத்தைத் தடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்

  1. மன அழுத்தத்தை குறைத்தல்
  2. சத்தான உணவுகள் உட்கொள்ளுதல்
  3. சரியான உடற்பயிற்சி
  4. உடல் பருமன் மற்றும் தூக்கமின்மையை குறைத்தல்
  5. சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
  6. மது மற்றும் புகை பழக்கத்தை கைவிடல்
  7. மருத்துவரின் அறிவுரையை கேட்டு நடத்தல்

கட்டுரையாளர் பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் நரம்பியல் துறையின் தலைவரும் மூத்த மருத்துவருமான ஆர். சிவக்குமார் ஆவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment