உங்கள் உறவு வலுப்பெற முதலில் அதற்கு கவனம் செலுத்துங்கள்!

Why its important to give your relationship the attention it deserves Tamil News உறவுகளை பற்றியும் அதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் சில சமயங்களில் கற்றுக் கொள்ள நேரம் தேவைப்படுகிறது.

Why its important to give your relationship the attention it deserves Tamil News
Why its important to give your relationship the attention it deserves Tamil News

Why its important to give your relationship the attention it deserves Tamil News : இந்தத் தொற்றுநோய் காலம் ஏராளமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. நம்மைப் பற்றியும் நம் தொடர்புகளைப் பற்றியும் நாம் என்ன மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை இது நமக்கு உணர்த்தியுள்ளது. நம் உறவுகளை ஆராயும் பாதையில் நாம் செல்லும்போது, அந்த உறவுகளின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றான தகுதியான கவனம் செலுத்துவதைப் பலரும் நினைப்பதில்லை. உறவுகள் எவ்வளவு பழையதாக இருந்தாலும், நம் துணையை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கும் ஒரு புள்ளி எப்போது வேண்டுமானாலும் வரும்.

எந்த ஒரு உறவிலும் அலட்சியப்போக்கு வந்துவிடும். அதனால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அவசியமில்லாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்போம்.

உறவுகள் நம் வாழ்க்கையின் ஒரு கடினமான பகுதியாகத் தோன்றினாலும், அவை உண்மையில் எளிமையானவை. ஆனால், சிறந்த உறவுகளுக்கு நிலையான உழைப்பும் புரிதலும் தேவை. இரண்டு நபர்கள் ஒரு உறவைத் தொடங்கி தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினால், அது நாம் நினைப்பது போல் எளிதானது அல்ல. உறவுகளை பற்றியும் அதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் சில சமயங்களில் கற்றுக் கொள்ள நேரம் தேவைப்படுகிறது. அதில், ஒருவருக்கு நாம் செலுத்துகின்ற கவனம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நீங்கள் ஓர் புதிய உறவைத் தொடங்கினாலும் அல்லது பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்தாலும், உங்கள் பார்ட்னர் மதிப்புமிக்கவராக உணருவது முக்கியம். ஒருவர் உண்மையில் தீவிரமான பாதையில் செல்ல வேண்டியதில்லை அல்லது ஆடம்பரமான ஒன்றைப் பரிசளிக்க வேண்டியதில்லை. ஒரு எளிய உணவு அல்லது நாள் முடிவில் உங்கள் இணையரின் பேச்சைக் கேட்பது கூட ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்ல, உங்கள் துணையை மதிப்பிடுவது ஒரே இரவில் வந்துவிடாது. இது ஒரு நிலையான முயற்சி, அதாவது மதிப்புமிக்க ஒன்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் உங்களை அர்ப்பணிப்பதாகும். காலங்கள் கடினமானவை, நாம் அனைவரும் நம் பாதையில் சிக்கிக் கொள்கிறோம். ஆனால், தொடர்ந்து முயற்சி செய்வதுதான் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. உங்கள் பார்ட்னர் தங்களின் தவறுகளை உணர்த்துவதற்கு நேரம் கொடுப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why its important to give your relationship the attention it deserves tamil news

Next Story
இந்தியாவின் நம்பர்.1 பணக்காரர்… ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com