Why long term friendships work out in marriages Tamil News : நம் வாழ்க்கையில் நட்பு என்பதற்கு சிறப்பு இடம் உண்டு. அதுபோலத்தான் காதலுக்கும் தனி இடம். ஆனால், இவ்விரண்டும் ஒன்றாக இருக்கும்போது, மேலும் ஓர் அழகான பிணைப்பை உருவாக்க முடியும். காதலில் இரு இதயங்கள் பிணைப்பதற்கு முன்பே நட்பால் இணைந்திருந்தால், அந்த உறவில் ஏராளமான பாசிட்டிவ் விஷயங்கள் உள்ளன. சிறந்த திருமண வாழ்க்கைக்கு நட்பு ரீதியான மனப்பான்மை மிகவும் முக்கியம். அதுவே சிறந்த நபரே துணையாய் கிடைத்தால், இரட்டிப்பு மகிழ்ச்சிதானே. திருமணங்களை வடிவமைப்பதில் நட்பு ஏன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்…
உங்கள் துணையுடன் சிறந்த நண்பராக இருப்பது உலகத்தின் சிறந்த உணர்வுகளில் ஒன்று. நன்கு புரிந்துகொள்ளக்கூடிய, நம்பகமான மற்றும் அன்பான பார்ட்னர் உங்களை ஒருபோதும் தனிமையாக உணர வைக்க மாட்டார். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் துணையின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
நீங்கள் உங்கள் மனைவியுடன் நீண்ட கால தோழனாக இருக்கும்போது, அவர்களிடம் நம்பிக்கை வைப்பது எளிதாகிறது. உங்கள் மனைவி உங்களை எப்படி நினைத்துக்கொள்வார் என்று யோசிக்காமல் உங்கள் துக்கங்கள், மகிழ்ச்சி, சந்தேகங்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒரேபோன்ற சிந்தனை இருந்தால், உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது எளிதாக இருக்கும்.
உங்கள் மனைவியைக் கவர நீங்கள் வேறொருவராக நடிக்கத் தேவையில்லை. அவர் உங்களை நேசிப்பதற்கு முன்பு உங்கள் தோழியாக இருந்திருந்தால், உங்கள் உண்மையான குணாதிசயங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே, உங்கள் மனைவியைக் கவர வேண்டிய அவசியமில்லை.
உங்கள் மனைவியுடன் முதலில் நண்பராக இருக்கும்போது, குடும்பங்களுடன் இணைவது எளிது. வழக்கமாக, உங்கள் வருங்கால மனைவியின் குடும்பத்தை சந்திப்பதை விட உங்கள் நண்பரின் குடும்பத்தை சந்திப்பதில் அழுத்தம் அதிகமாக இருக்காது. அது ஒரு நீண்ட கால நட்பாக இருக்கும்போது, அனைவருடனும் வலுவான, ஆழமான உறவை உருவாக்குவது மிகவும் எளிதாகிவிடும்.
திருமணத்திற்கு முன்பிருந்தே வலுவான நட்பைக் கொண்ட தம்பதிகள் திருமணத்தில் மூன்று அல்லது ஐந்து மடங்கு திருப்தி அடைவதாக சில ஆராய்ச்சிகளும் கூறுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil