மாதுளை பழம் நாம் எடுத்துகொள்ளும் சிறந்த உணவுகளில் ஒன்று. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், பாலிபினால்ஸ், ஆன்தோசையனின்ஸ் உள்ளது. இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது.
இதில் வைட்டமின் சி, நார்சத்து, பொட்டாஷியம் உள்ளது. இந்த நார்சத்து ஜீரண மண்டலத்தின் ஆரோக்கித்திற்கு உதவுகிறது. மேலும் இந்நிலையில் சீரான வயிற்றின் செயல்பாடு இருக்கும். மலச்சிக்கலை தடுக்கும்.
மேலும் தொடர்ந்து மாதுளை பழம் சாப்பிடுவதால், நினைவாற்றல் மற்றும் யோசிக்கும் திறனும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது அல்சிமர்ஸ் நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.
இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடை குறையும். நல்ல அளவில் உள்ள பழுத்த மாதுளையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
மாதுளையின் தோலை வைத்து டீ செய்து குடிக்கலாம். இந்நிலையில் இதன் தோல் மற்றும் விதைகளை வைத்து வினிகர் செய்யலாம். மாதுளையின் தோலை நாம் பொடியாக்கி, அதை நாம் உணவு, பானங்களில் சேர்க்கலாம்.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“