scorecardresearch

நயன்தாரா ஹனிமூன்’ல போட்டிருந்த ஹேண்ட்-பேக்  விலை இத்தனை ஆயிரமா? அதுல அப்படி என்னதான் இருக்கு?

அப்போது சில ஃபேஷன் விரும்பிகள் ஹனிமூன் படங்களை விட, நயன்தாரா அணிந்திருந்த ஹேண்ட்-பேக் கவனித்தனர்.

Prada Brand handbags
Why Prada Brand handbags so expensive

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில், கடந்த 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இப்போது ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்றுள்ளனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அப்போது சில ஃபேஷன் விரும்பிகள் ஹனிமூன் படங்களை விட, நயன்தாரா அணிந்திருந்த ஹேண்ட்-பேக் கவனித்தனர். அது பிராடா ஹேண்ட்-பேக், அதன் விலை ரூ.91,555 என்று தெரிந்ததும்,  உடனே அதுகுறித்து விவரங்களை ஆன்லைனில் தேடத் தொடங்கினர்.

நயன்தாரா அணிந்திருந்த பிராடா ஹேண்ட் பேக்கின் சிறப்பு என்ன?

பிராடா, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடம்பரப் பொருட்களில் நிபுணத்துவம் பெற்ற பேஷன் பவர்ஹவுஸ் ஆகும். குறிப்பாக பிராடா ஹேண்ட்- பேக்ஸ் அவற்றின் உயர்தர நேர்த்தி மற்றும் தரம் மற்றும் தனித்துவமான பாணிகளுக்காக அறியப்படுகின்றன.

இந்த நிறுவனம் 1913 ஆம் ஆண்டில் மரியோ பிராடா மற்றும் அவரது சகோதரர் மார்டினோ ஆகியோரால் இத்தாலியில் தொடங்கப்பட்டது. பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து லெதர் ஆடம்பர கைப்பைகள் பிராடாவின் பிரதான அம்சமாக இருந்து வருகிறது.

பிராடா அவர்களின் கைப்பைகளுக்கு சிறந்த சஃபியானோ லெதர்களை பயன்படுத்துவதாக அறியப்படுகிறது

பிராடா உலகின் சிறந்த ஆடம்பர பிராண்டுகளில் ஒன்று, இதன் லெதர் மிகவும் தரமான நிலையில் பதப்படுத்தப்படுகிறது, இது பைகளை மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும், எல்லா நிலைகளிலும் நன்கு பராமரிக்கவும் செய்கிறது.

இரண்டாவது அதன் டிசைன் மற்றும் ஸ்டைலிங், இது பெண்கள் விரும்பும் வகையில் மிகவும் அழகாக, எவர்கிரீன் லுக்குடன் வருகிறது. இதனால், பல ஆண்டுகள் கடந்தும் இந்த ஹேண்ட்-பேக்ஸ்  டிரெண்டியாக  உள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் பிராடா கேலரியா டோட் பேக் ஆகும், இது எப்பொழுதும் அதன் ஸ்டைலை விட்டு வெளியேறாது. பிராடா ஹேண்ட்-பேக்ஸ் எந்த ஆடைக்கும் ஒரு சிறந்த துணை! மேலும் சாஃபினோ லெதர் நீடித்த, ஸ்க்ரட்ச் ப்ரூஃப் போன்ற பல அம்சங்கள் நிறைந்தது

மிக சமீபத்தில், பிராடாவின் ஸ்லிக் கிளியோ பேக், ஃபேஷன் பிரியர்களுக்கான கனவாக மாறிவிட்டது.

மியு மியு மற்றும் பிராடா ஆகியவை ஒரே குழுவின் நிறுவனங்கள், அவை ஃபேஷன் துறையில் முதல் இடங்களில் உள்ளன. அவர்கள் மில்லியன்கணக்கான பணத்தைக் கொட்டி மார்க்கெட்டிங் செய்கிறார்கள், இதனால், தங்கள் பிராண்டுக்கு அதிக விலை நிர்ணயிப்பதன் மூலம் அந்தச் செலவை மீட்டெடுக்கிறார்கள். இதனால் இந்த ஹேண்ட்- பேக்ஸ் எப்போதும் அதிக எக்ஸ்பன்ஸிவாக உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Why prada brand handbags so expensive

Best of Express