கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்க கோவிட் 19 தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுகொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) கூறியுள்ளபடி, கோவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்ட பின்னரே ஒருவர் “முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்” என்று கருத முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மிகவும் முக்கியமானது ஏன்?
எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியாவின் கூற்றுப்படி, தடுப்பூசியின் முதல் டோஸ் பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்காது. ஆனால், COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியை தயார் செய்கிறது.
இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிக எண்ணிக்கையிலான ஆன்டிபாடிகளை உருவாக்க தூண்டுகிறது. இதன் விளைவாக செல்களுக்கு இடையே நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. இது நினைவக செல்களைத் தூண்டுகிறது. இதனால் உடல் இந்த ஊசியை நீண்ட காலத்துக்கு தக்க வைத்துக் கொள்கிறது. மறு தொற்றின்போது ஆன்டிபாடிகளை விரைவாக உருவாக்க உதவுகிறது.
எனவே, கோவிட் - 19 தொற்றுக்கு எதிராக அதிகபட்ச பாதுகாப்பைப் பெற தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போட்டுக்கொள்வது அவசியம்.
நீங்கள் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டவுடன், சி.டி.சி உங்களால் கீழ்கண்டவை எல்லாம் முடியும் என்று குறிப்பிடுகிறது:
*எந்தவொரு வயதினருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றவர்களுடன் முகக்கவசம் இல்லாமல் வீடு அல்லது தனியார் இடங்களுக்குள் செல்ல முடியும்.
*கடுமையான நோய் ஆபத்து இல்லாத தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் வீட்டுக்கு அல்லது தனியார் இடத்திற்கு செல்லலாம்.
இருப்பினும், நீங்கள் இன்னும் அளவான அல்லது பெரிய கூட்டங்கள் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"