உரித்த வெங்காயம் ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது… ஏன் தெரியுமா?

Why should you avoid storing peeled and cut onions in fridge Tamil News குளிர்ந்த வெப்பநிலை, அவற்றின் பிடியை இழந்து, ஈரமாக மாறி, நோய்க்கிருமிகள் உருவாக வழி செய்கிறது.

Why should you avoid storing peeled and cut onions in fridge Tamil News
Why should you avoid storing peeled and cut onions in fridge Tamil News

Why should you avoid storing peeled and cut onions in fridge Tamil News : உரித்த வெங்காயத்தைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை ஏன் தவிர்க்க வேண்டும்?

வெங்காயம் நம் அன்றாட சமையலில் பிரிக்க முடியாத அங்கம். நாம் சமைக்கும் குழம்புகளுக்கு ஒரு தனித்துவமான சுவை மற்றும் அமைப்பைச் சேர்ப்பது முதல் சாலட்களின் சுவையை மேம்படுத்துவது வெங்காயம் எந்தவொரு சுவையான உணவுக்கும் ஆன்மாவை சேர்க்கிறது. இருப்பினும், அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் கடுமையான வாசனை, அவற்றை நறுக்கி சேமிப்பதைக் கடினமாக்குகிறது. ஆனால், அன்றாட சமையலில் நாம் அடிக்கடி வெங்காயத்தைத் தோலுரித்து, நறுக்கி, நேரத்தை மிச்சப்படுத்தக் குளிர்சாதனப் பெட்டியில் சேமிப்போம். ஆனால், உரித்த வெங்காயத்தைக் குளிர்சாதனப் பெட்டியில் சேமிப்பது பாதுகாப்பானதா? அதை ஏன் தவிர்க்க வேண்டும்?

வெங்காயத்தின் வலுவான வாசனை உங்கள் சுவையான உணவுகளுக்கு சுவை சேர்க்கலாம். ஆனால், சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து திறந்தால் அது துர்நாற்றத்தை உருவாக்குகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தில் sulfur அதிகம் நிறைந்துள்ளது மற்றும் பல மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. அதுமட்டுமின்றி பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளன.

உரிக்கப்படும் அல்லது நறுக்கப்பட்ட வெங்காயம், பாக்டீரியா மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள நோய்க்கிருமிகளால் எளிதில் மாசுபடுகிறது. இது வெங்காயத்தின் ஆக்சிஜனேற்றத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், இது நோய்க்கிருமிகளின் இனப்பெருக்கத்திற்குக் காரணமாக அமையும் மற்றும் அதிக தீங்கு விளைவிக்கும்.

வெங்காயத்தை உரித்து நறுக்கி வைக்கக்கூடாது என்பதற்கான மற்றொரு காரணம், வெங்காயத்தை வெட்டும்போது, ​​வெங்காயத்தின் செல்கள் பாதிக்கப்பட்டு சாறுகள் வெளியேறுவதற்கு வழிவகுக்கும். இது வெளிப்படும் போது பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கலாம்.

உரிக்கப்படும் வெங்காயத்தைக் குளிரூட்டினால், குளிர்சாதனப்பெட்டியின் உள்ளே இருக்கும் ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த வெப்பநிலை, அவற்றின் பிடியை இழந்து, ஈரமாக மாறி, நோய்க்கிருமிகள் உருவாக வழி செய்கிறது. இது ஊட்டச்சத்து அளவைக் குறைத்து பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

வெங்காயத்தை சேமிக்க சரியான வழி என்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தை உரித்து சேமிப்பது சிறந்த செயலல்ல. நீங்கள் ஊட்டச்சத்து நன்மைகளைப் பெற விரும்பினால், வெங்காயத்தை எப்போதும் சமைக்கும் போது மட்டும் உரித்து, நறுக்கவேண்டும். யுனைடெட் ஸ்டேட்ஸ் வேளாண்மைத் துறையின் (USDA) கூற்றுப்படி, வெங்காயத்தை 40 டிகிரி பாரன்ஹீட் அல்லது 4.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சீல் செய்யப்பட்ட கன்டெயினரில் வைப்பதே சிறந்த வழி.

ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வெங்காயத்தை சேமிப்பதற்கான மற்றொரு எளிதான ஹேக் என்னவென்றால், உரிக்கப்படும் ஒவ்வொரு வெங்காயத்தையும் உலர்ந்த காகிதத் துண்டில் போர்த்தி வைப்பதுதான். இது, காற்றில் ஈரப்பதத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why should you avoid storing peeled and cut onions in fridge tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com