இன்றைய வேகமான உலகில், உடல்நலப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடுவது பொதுவானது. அதேநேரம் நாம் நன்றாக உணரத் தொடங்கும் தருணத்தில், அவற்றை எடுத்துக்கொள்வதை நிறுத்த ஆசைப்படலாம்.
இருப்பினும், இது நமது ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, விருப்பத்தின் பேரில் மருந்துகளை நிறுத்துவது தொடர்பான சில நிகழ்வுகளை பற்றி விவாதிப்போம்.
1. ரத்த அழுத்தம் மீண்டும் உயரும்
மருந்துகளை பாதியில் நிறுத்துவது என்பது, ஆரம்பத்தில் சிகிச்சை பெற நம்மைத் தூண்டிய அறிகுறிகளை மீண்டும் ஏற்படுத்தலாம். அடிப்படை நிலை முழுமையாக கவனிக்கப்படாமல் இருப்பதால் இது நிகழ்கிறது.
உதாரணமாக, நீங்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டு, திடீரென நிறுத்தினால், உங்கள் ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரிக்கலாம், இதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.
உடல் பருமன், வாழ்க்கை முறை, புகைபிடித்தல், குடிப்பழக்கம், உணவுமுறை போன்ற மாற்றியமைக்கக்கூடிய ஆபத்து காரணிகளால் ரத்த அழுத்தம் ஏற்பட்டால், அவற்றை நிர்வகிப்பதால் உங்கள் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தால், உங்கள் மருத்துவர் உங்கள் டோசேஜை படிப்படியாகக் குறைத்து, ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு உங்கள் நிலையைப் பார்ப்பார்.
மருந்தை நிறுத்துவது எப்போதும் வேலை செய்யாது, ஏனெனில் அனைத்து மாற்றக்கூடிய ஆபத்து காரணிகளைக் குறைப்பதில் நோயாளிகள் எப்போதும் தங்கள் நடைமுறைகளுடன் ஒத்துப்போவதில்லை.
மாற்ற முடியாத ஆபத்து காரணிகள் உள்ளவர்களுக்கு, வாழ்க்கை முறை மாற்றங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க போதுமானதாக இருக்காது மற்றும் அவர்களுக்கு மருந்து தேவைப்படும். இந்த தூண்டுதல்களில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தின் குடும்ப வரலாறு, முதுமை, தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது புற்றுநோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற நோய்கள் அடங்கும்.
2. முழுமையற்ற சிகிச்சை மருந்து எதிர்ப்புக்கு வழிவகுக்கும்
பல மருந்துகள், குறிப்பாக ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் ஆன்டிவைரல்ஸ், நம் உடலில் உள்ள குறிப்பிட்ட பாக்டீரியா அல்லது வைரஸ்களை குறிவைத்து செயல்படுகின்றன. பரிந்துரை முடிவதற்கு முன்பு இந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தினால், தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளை முழுமையாக அழிக்க முடியாது.
இந்த முழுமையற்ற சிகிச்சையானது பாக்டீரியா அல்லது வைரஸ்களின் வலுவான, அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட பிறழ்வுகள் உயிர்வாழ வழிவகுக்கும். இதன் விளைவாக, அடுத்த முறை நாம் நோய்வாய்ப்படும்போது, அதே மருந்து பலனளிக்காமல் போகலாம், வலுவான அல்லது மாற்று சிகிச்சைகள் தேவைப்படலாம்.
3. நிலைமை மோசமடைதல்
சில சந்தர்ப்பங்களில், மருந்துகளை முன்கூட்டியே நிறுத்துவது நிலைமை மோசமடைய வழிவகுக்கும். நீரிழிவு, ஆஸ்துமா அல்லது மனநல கோளாறுகள் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு மருந்து மூலம் நிலையான கவனிப்பு தேவைப்படுகிறது. சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இந்த மருந்துகளை நிறுத்துவது உடல்நலம் மோசமடைவதற்கும் சாத்தியமான மருத்துவ அவசரநிலைகளுக்கும் வழிவகுக்கும்.
4. பாதுகாப்பு கவலைகள்
சில மருந்துகள், குறிப்பாக மனநல நிலைமைகள் அல்லது நாட்பட்ட நோய்களுக்கான மருந்துகளுக்கு, வித்டிராயல் சிம்ப்டம்ஸ் அல்லது பாதகமான எதிர்விளைவுகளைத் தவிர்க்க, மருத்துவ மேற்பார்வையின் கீழ் படிப்படியாக குறைத்தல் செயல்முறை தேவைப்படுகிறது. இந்த மருந்துகளை திடீரென நிறுத்துவது ஆபத்தானது மற்றும் கடுமையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
5. முன்னேற்றத்திற்கான தவறவிட்ட வாய்ப்புகள்
மருந்துகள் நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றை பாதியில் நிறுத்துவதன் மூலம், அவை வழங்கும் சாத்தியமான பலன்களை நாம் இழக்கிறோம். பரிந்துரைக்கப்பட்ட காலம் (prescribed course) மருந்து உகந்ததாக வேலை செய்வதற்கும் விரும்பிய விளைவுகளை வழங்குவதற்கும் போதுமான நேரத்தை வழங்குகிறது.
6. அதிகரிக்கும் மருத்துவ செலவுகள்
நாம் மருந்துகளை முழுவதுமாக உட்கொள்ளாமல், நமது உடல்நிலை மோசமடைந்தால், அது அடிக்கடி மருத்துவரை பாப்பது, கூடுதல் பரிசோதனைகள் மற்றும் சில சமயங்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு வழிவகுக்கிறது. இவை சுகாதாரச் செலவுகளை கணிசமாக அதிகரிக்கலாம், அது நமக்கும் நம் அன்புக்குரியவர்களுக்கும் ஏற்படும் உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான பாதிப்பைக் குறிப்பிடவில்லை.
சுகாதார வல்லுநர்கள் தங்கள் நிபுணத்துவம் மற்றும் உங்கள் மருத்துவத் தேவைகளைப் புரிந்துகொள்வதன் அடிப்படையில் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். எனவே, அவர்களின் ஆலோசனையை நம்பி, பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையை முடிக்கவும்.
Read in English: Why stopping BP drugs midway may harm you more
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“