விநாயகர் சதுர்த்தி: பூஜை செய்யும் முறை, நேரம் இதுதான்!

Why Vinayagar Chathurthi Celebrated Poojai Good Time Lord Ganesh Festival அன்னையின் சொல்லை அப்படியே பின்பற்றிய விநாயகர், அங்கு வந்த பார்வதி தேவியின் மணாளன் சிவபெருமானையும் தடுத்து நிறுத்தினார்.

Why Vinayagar Chathurthi Celebrated Poojai Good Time Lord Ganesh Festival
Why Vinayagar Chathurthi Celebrated Poojai Good Time Lord Ganesh Festival

Why Vinayagar Chathurthi Celebrated Poojai Good Time Lord Ganesh Festival : பண்டிகைகளின் காலம் தொடங்கிவிட்டது. அதிலும், இந்து மதத்தினரின் முழுமுதற் கடவுள் என்று போற்றப்படும் விநாயகர் சதுர்த்தியுடன் பண்டிகைகள் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளன. யானை முகத்தோனை அவருடைய அன்னை பார்வதி தேவி உருவாக்கிய தினத்தைத்தான் நாம் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடி வருகிறோம். இந்த மாபெரும் பண்டிகையைக் கொண்டாடுவதற்கான நோக்கம் மற்றும் எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கேள்விகளுக்கான முழு விவரங்கள் இங்கே உள்ளன…

விநாயகர் எப்படிப் பிறந்தார்?

திருவிளையாடலின்படி, தனக்கென தனிப்பட்ட வகையில் ஓர் வீராதி வீரன் காவலாளியாக இருக்கவேண்டும் என எண்ணிய ஈசனின் மனைவி பார்வதி தேவி, தன் கரத்தாலேயே மஞ்சள் கொண்டு விநாயகரை உருவாக்கினார். ஒருமுறை, தான் நீராடிவிட்டு வரும் வரை இந்த இடத்தில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்ற நிபந்தனையை விட்டுச் சென்றுள்ளார் பார்வதி. அன்னையின் சொல்லை அப்படியே பின்பற்றிய விநாயகர், அங்கு வந்த பார்வதி தேவியின் மணாளன் சிவபெருமானையும் தடுத்து நிறுத்தினார்.

தன்னையே தடுத்து நிறுத்தும் சிறுவனா என்று சினம்கொண்ட சிவபெருமான், விநாயகரை எதிர்த்து சண்டையிட்டார். இருவருக்கிடையே மோதல் அதிகரிக்க, சிவபெருமானுக்கு ஆதரவாகக் கணங்களும், பிரம்ம தேவனும் களத்தில் இறங்கினர். ஆனால், அப்போதும் வெல்ல முடியாமல் போகவே, தன் சூலாயுதத்தால் விநாயகரின் தலையைத் துண்டித்தார் சிவபெருமான்.

நீராடிவிட்டு வந்த பார்வதி, விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் உயிர் தரவேண்டும் என்று ஈசனிடம் வேண்டிக்கொண்டார் பார்வதி. அதனால், கனங்களை அனுப்பி வடக்கில் தலை வைத்திருக்கும் பிள்ளையின் தலையை வெட்டி எடுத்து வாருங்கள் என ஈசன் கூறினார். பல இடங்களில் தேடியும், அப்படிப்பட்ட பிள்ளையின் தலை கிடைக்காததால், இறுதியாகக் கனங்கள் வடக்கில் தலைவைத்திருந்த யானைக்குட்டியின் தலையைக் கொண்டு வந்தனர். பிறகு யானைக்குட்டியின் தலையை வைத்தே உயிர்கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இனி கனங்களின் தலைவனாகும் கணபதி தான் முழு முதற்கடவுளாக விளங்குவார் என்றும் எந்த ஒரு வழிபாடு ஆரம்பிப்பதாக இருந்தாலும், அங்கு முதலில் விநாயகரை வழிபட்ட பின்னரே செய்வார்கள் என்றும் மகாவிஷ்ணு விநாயகருக்கு வரம் கொடுத்தார்.

விநாயகர் சதுர்த்தி எப்போது?

ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஆவணி 25-ம் தேதி வெள்ளிக்கிழமை அதாவது ஆங்கில மாதம் செப்டம்பர் மாதம் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி எப்படிக் கொண்டாட வேண்டும்?

களிமண்ணால் செதுக்கப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்து, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள் உள்ளிட்ட பல பதார்த்தங்களைப் படைத்து வழிபடலாம். பிறகு 3 அல்லது 5 நாட்கள் கடந்தபின் அச்சிலையை நீர் நிலைகள், ஆறு, கடலில் கரைக்கலாம். இதுவே, பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. ஆனால், நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதால், இம்முறை விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பூஜை செய்ய நல்ல நேரம்

காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

கெளரி நல்ல நேரம்

காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை

பகல் 1.00 மணி முதல் 1.30 மணி வரை

மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

இரவு 09.30 மணி முதல் 10.30 மணி வரை

கணபதி ஹோமம் செய்ய நல்ல நேரம்

காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை

பணி இடத்தில் விநாயகர் பூஜை செய்ய நல்ல நேரம்

காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why vinayagar chathurthi celebrated poojai good time lord ganesh festival

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com