மாத்திரை அட்டையில் இந்த சிவப்பு கோடு எப்போதாவது கவனித்தீர்களா? உஷார்..! வருடத்திற்கு 7000 மரணம்

இந்தச் சிகப்பு கோடு மருந்துகளை மருத்துவ ஆலோசனை இன்றி உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்களை விளக்க பொது சுகாதார நிபுணர் டாக்டர் ஜகதீஷ் ஹிரேமத் அவர்கள் சில முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார்.

இந்தச் சிகப்பு கோடு மருந்துகளை மருத்துவ ஆலோசனை இன்றி உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்களை விளக்க பொது சுகாதார நிபுணர் டாக்டர் ஜகதீஷ் ஹிரேமத் அவர்கள் சில முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார்.

author-image
Mona Pachake
New Update
download (78)

மருத்துவ உலகில் பலரும் கவனிக்காமல் போகும் ஒரு முக்கிய குறியீடு மருந்து பெட்டிகளில் உள்ளது — செங்குத்தாக அச்சிடப்பட்ட வண்ண கோடுகள். இது ஒரு வடிவமைப்புக் கலையல்ல, மாறாக, அரசாங்கத்தின் ஒரு கட்டாய விதிமுறையாகும். மருந்துகள் மருத்துவர் பரிந்துரை இன்றியே வாங்கக்கூடிய (OTC) மருந்துகள் மற்றும் மருத்துவர் பரிந்துரை அவசியமான Schedule H/H1 வகை மருந்துகள் என தெளிவாக பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

Advertisment

இந்த விதிமுறையின் படி, நீல கோடு கொண்ட மருந்துகள் OTC வகையைச் சேர்ந்தவை — சாதாரணமாக வாங்கி பயன்படுத்தக்கூடியவை. ஆனால் சிகப்பு கோடு கொண்ட மருந்துகள் ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றை மருத்துவர் பரிந்துரையுடன் மட்டுமே வாங்க முடியும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தவறான மருந்து உபயோகத்தால் அல்லது தவறான அளவு மருந்து உட்கொள்வதால் 7,000-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன. இதைத் தடுக்கவே இந்த விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சிகப்பு கோடு மருந்துகளை மருத்துவ ஆலோசனை இன்றி உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்களை விளக்க பொது சுகாதார நிபுணர் டாக்டர் ஜகதீஷ் ஹிரேமத் அவர்கள் சில முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார்.

1. சிகப்பு கோடு மருந்துகள் என்பவை என்ன?

டாக்டர் ஹிரேமத் கூறுகையில், “சிகப்பு நிற செங்குத்து கோடு கொண்ட மருந்துகள் ‘Schedule H’ அல்லது ‘Schedule H1’ பிரிவில் அடங்கும். இது ஒரு ‘regulatory warning’, அதாவது சட்டப்படி இந்த மருந்துகள் மருத்துவர் பரிந்துரையுடன் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்பதை குறிக்கும் ஒரு எச்சரிக்கை சின்னம்,” என்கிறார். இந்த வகை மருந்துகளில் தவறான அளவு அல்லது தவறான நோக்கத்துடன் உட்கொள்வது தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

Advertisment
Advertisements

2. சிகப்பு கோடு மருந்துகளின் சில பொதுவான உதாரணங்கள்

டாக்டர் ஹிரேமத் பகிர்ந்த தகவலின்படி, அஜித்ரோமைசின், அமோக்சிசிலின் போன்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகள், பிரெட்னிசோலோன் போன்ற ஸ்டெராய்டுகள், மற்றும் அல்ப்ராஸோலாம் போன்ற மன அழுத்தம் மற்றும் தூக்கத்திற்கான மருந்துகள் இந்தப் பிரிவில் அடங்குகின்றன. இதற்கு கூடுதலாக, சில இருமல் சிரப்புகள், ஹார்மோன் மாத்திரைகள், மற்றும் பேன்கில்லர்கள் கூட இந்த கோடு கொண்டிருக்கும். “இந்த மருந்துகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் ஒவ்வொருவருக்கும் அளவு, காலம் மற்றும் உடல்நிலை வேறுபடும் என்பதால் மருத்துவரின் வழிகாட்டுதல் அவசியம்,” என்கிறார் அவர்.

3. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்துகளை உட்கொள்வது ஏன் ஆபத்தானது?

“ஒவ்வொரு மருந்தும் ஒரு குறிப்பிட்ட நோய்க்காகவும், ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே பயன்பட வேண்டும்,” என்கிறார் டாக்டர் ஹிரேமத்.
மருத்துவர் பரிந்துரை இன்றி இதை உட்கொள்வது:

  • அடிப்படை நோய்களை மறைக்கும்
  • மருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் (drug resistance)
  • ஆபத்தான மருந்து சேர்க்கைகளால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

உதாரணமாக, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தேவையின்றி எடுத்தால் எதிர்காலத்தில் சாதாரண நோய்களுக்கும் மருந்து வேலை செய்யாமல் போகும். அதேபோல, ஸ்டெராய்டுகள் அல்லது ஹார்மோன் மருந்துகள் தவறாக எடுத்தால் உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கக்கூடும்.

4. தவறாக பயன்படுத்தும் போது ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகள்

சில பொதுவான அறிகுறிகள்:

  • ஒவ்வாமை
  • வயிற்று எரிச்சல் மற்றும் ஜீரண கோளாறுகள்
  • ஹார்மோன் சமநிலை பாதிப்பு
  • மனநிலை மாற்றங்கள்

மிகவும் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தூக்கமருந்துகள் மற்றும் மனஅழுத்த மருந்துகளை தவறாக எடுத்தால் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும். “இருப்பினும், சாதாரண பேன்கில்லர் கூட அடிக்கடி எடுத்தால் வயிற்றுப் புண் அல்லது சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்,” என அவர் எச்சரிக்கிறார்.

5. நீண்டகால விளைவுகள் மிக ஆபத்தானவை

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்துகளை தொடர்ந்து எடுத்தால்:

  • ஆண்டிபயாட்டிக் எதிர்ப்பு சக்தி உருவாகி எதிர்கால நோய்களுக்கு சிகிச்சை கடினமாகலாம்.
  • ஸ்டெராய்டுகள் மற்றும் ஹார்மோன் மாத்திரைகள் உடலில் ஹார்மோன் சமநிலையை குலைத்து எலும்புகள் பலவீனமாவதற்கும், கல்லீரல் பாதிப்பிற்கும் வழிவகுக்கும்.
  • சில மருந்துகள் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும்.

6. மருந்துகளைப் பற்றிய தவறான நம்பிக்கைகள்

“ஒரு முறை ஒரு மருந்து வேலை செய்தது என்பதற்காக அதை மீண்டும் மருத்துவர் ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது என பலர் நினைக்கிறார்கள் — இது ஒரு பெரிய தவறு,” என்கிறார் டாக்டர் ஹிரேமத். மேலும், அதிக அளவு மருந்து எடுத்தால் விரைவில் குணமாகலாம் என்பதும் ஒரு பொய்யான நம்பிக்கையே என அவர் கூறுகிறார். “ப்ரெஷகிரிப்ட்டின் மருந்துகள் எப்போதும் தகுதியான மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்துகிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: