காலையில் பூண்டு, தண்ணீர்… என்ன நன்மைகள்? எப்படி பயன்படுத்துவது?

செரிமான கோளாறுகளை முற்றிலும் சரி செய்வதுடன் பசியையும் தூண்டுகிறது. உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.

ஒரு நல்ல காலையின் ஆரம்பம் மிகவும் ஆரோக்கியமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? தேநீர், காஃபி குடிப்பதற்கு பதிலாக தண்ணீர் அருந்துவதில் அத்தனை நன்மைகள் இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் பூண்டுடன் சேர்த்து தண்ணீர் குடித்திருக்கின்றீர்களா?

மிகவும் புதிய பூண்டாக அது இருக்க வேண்டும். சிறிது பற்களை மட்டும் கவனமாக தோல் நீக்கிக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக அதனை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக பூண்டினை சாப்பிட்டால் நம்முடைய வயிற்றுக்கு பிரச்சனை தான் ஏற்படும். வெட்டி வைத்திருக்கும் சில துண்டுகளை எடுத்து வாயில் போட்டி தண்ணீர் ஊற்றி முழுங்கினால் போதுமானது.

மேலும் படிக்க : வெந்தயம் சாப்பிட சரியான நேரம் எது?

இதனால் ஏற்படும் நன்மை என்ன தெரியுமா?

வெறும் வயிற்றில் பூண்டினை சாப்பிட்டால் அது உடலின் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும் அதே போன்று கொழுப்பின் அளவை குறைக்கும்.

சிறந்த ஆண்ட்டி பயோட்டிக்காக இருக்கின்ற காரணாத்தால் அது நுரையீரலில் ஏற்படும் நோய்களை கட்டுக்குள் வைக்கிறது. அதே போன்று புற்றுநோய் கட்டிகள் உருவாவதையும் தடுக்கிறது.

பூண்டில் நிறைய ஆண்ட்டி ஃப்ங்கல் கூறுகள் இருப்பதால் காய்ச்சல் மற்றும் இருமலை தடுக்கிறது. குடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் அதனை வலுவடைய செய்கிறது.

செரிமான கோளாறுகளை முற்றிலும் சரி செய்வதுடன் பசியையும் தூண்டுகிறது. உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why you should start your day with raw garlic and water

Next Story
குழந்தைகள் வெறுக்கிறார்களா? பாகற்காயை இப்படி சமைச்சுப் பாருங்க!bitter gourd recipes, bitter gourd recipes south indian, vegetarian bitter gourd recipes, bitter gourd curry, பாகற்காய், பாகற்காய் வறுவல், பாகற்காய், tamil nadu bitter gourd recipes, bitter gourd recipes in tamil, andhra recipe, mangalorean bitter gourd recipes, karela bitter gourd, பாகற்காய் செய்வது எப்படி, karela patty, bitter gourd curry kerala style, bitter gourd recipe chinese style, benefits of bitter gourd, பாகற்காயின் நன்மைகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com