Advertisment

வைல்ட் ஹிமாலயா புத்தகம் : ஸ்டீபன் அல்டரின் இமயமலை தரிசனம்!

இமயம் உங்களது தன்முனைப்பு எண்ணத்தை தரைமட்டமாக்கி தன்னோடு அமைதியாக இணைத்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Wild Himalaya book review

Wild Himalaya book review

Wild Himalaya book review : ‘இமயம் கண்டேன்” என்ற கவிஞரின் பாடல் வரியின் தொடக்கமே அதில் மறைந்துள்ள விந்தையை பற்றி நாம் அறிய தூண்டுகிறது. உலகின் பல்வேறு பிரம்மாண்டமான மலைத்தொடர்களில் முக்கியமான மலைத் தொடர் இமயமலை. எந்தவொரு மனிதனும் அதன் அழகையும், பிரம்மாண்டத்தையும் கண்டு வியப்படையாமல் இருந்ததில்லை. உலகின் மிகப்பெரிய, பெருமைக்குரிய இந்த இமாலய மலைத்தொடர்பகுதியில் பிறந்தவர்கள் உண்மையிலேயே அதி~;டசாலிகள் என்றே சொல்ல வேண்டும். இயற்கையோடு ஒன்றிணைந்த சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் இயற்கையிலேயே ஆளுமை படைத்தவர்களாக உருவாகிறார்கள் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

Advertisment

இமயத்தின் தோற்றம் அதன் அழகோடு கூடிய மனதை மயக்கும் தோற்றம் போன்றவை நம் வாழ்வில் நாம் பெற்ற அனைத்து செல்வங்களை விடவும் பெரியது என்று சொன்னவர், இமயமலையின் வரலாற்றை எழுதிய ஸ்டீபன் அல்டர் என்ற அறிஞர். இவர் இமாலய அடிவாரத்தில் அமைந்துள்ள முசோரி அருகில் உள்ள லாண்டூர் எனும் கிராமத்தில் வளர்ந்தவர். ஸ்டீபன் அல்டர் தன் வாழ்நாளில் இமயமலையின் இயற்கை அழகு தமக்கு அளித்த அனைத்து அனுபவங்களையும், உணர்வுகளையும் மக்களோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் 2500 கிலோ மீட்டர் நிலமும், 9 கிலோ மீட்டர் உயரமும் உடைய இமயமலையின் சுயவரலாற்றை நமக்கு அளித்திருக்கிறார்.

இந்த புத்தகத்தில் இமய மலைத்தொடரை பற்றிய பல்வேறு சிறப்பம்சங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கையில் இந்த மலைத்தொடர் கண்டங்கள் நகர்தல் என்ற புவியியல் நிகழ்வின் மூலம் கடல் மட்டத்திலிருந்து நகர்ந்து உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய துணைக் கண்டம் ஆசியக் கண்டத்தில் இந்நிகழ்வின் மூலம் தன்னை இணைத்துக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தக ஆசிரியர் ஸ்டீபன் அல்டர் நிலவியல் மற்றும் புவியியல் கோட்பாடுகளை இமயமலையுடன் தொடர்புபடுத்தி விளக்குவதற்காக அங்கிருந்து கிடைத்த படிமங்களை சேகரித்துள்ளார்.

இதற்காகவே மலையேற்றத்தையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். அத்துடன் இமயமலையின் புவியியல் தன்மைகளையும் குறிப்பாக மலைத்தொடரின், அதன் பனிப்பாறைகளின் சிறப்பையும் குறிப்பிட்டுள்ளார். இமயமலையில் உருவாகும் நதிகள் அனைத்துமே இந்திய துணைக்கண்டத்தின் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவதாக விவரித்துள்ளார். இமயமலையில் காணப்படும் பருவநிலை, புவிவெப்பமயமாதல் மூலம் அங்குள்ள பருவநிலையில் ஏற்படும் தாக்கங்கள் அங்குள்ள வளமான நிலப்பகுதிகள், பல்வேறு வகையான வனங்களின் தன்மைகள் குறித்தும் விவரித்துள்ளார்.

இமயமலையும், அதைச்சார்ந்த வனப்பகுதிகள், நிர்நிலைகள் ஆகியவற்றின் சூழல்களுக்கேற்ப வளரக்கூடிய தாவரங்கள், உயிரினங்கள், விலங்கினங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அனையனைத்தும் அங்குள்ள மிகவும் அசாதாரண சுற்றுக் சூழலுக்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொண்ட உயிரினங்கள் என்று அறிவியல் ரீதியான விளங்கங்களையும் தெரிவித்துள்ளார். இம்மலைப்பிரதேசத்தின் பூர்விக குடிகளாக கருதப்படும் பல்வேறு வகை மலைவாழ் மக்களை பற்றிய கதைகளையும் இணைத்துள்ளார். இமயமலையின் சிறப்பையும், அதில் அமைந்துள்ள உயர்ந்த சிகரங்களையும் அறிந்து கொள்ள கண்டுபிடிப்பாளர்களும்;, சாதனையாளர்களும்; வரைந்த வரைபடங்கள், மற்றும் மிகப்பெரிய பள்ளத்தாக்குகளையும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

To read this article in English

இமயமலை வரலாறு அதன் சிகரத்தை தொட்ட சாதனையாளர்களோடு இரண்டறக் கலந்தது என்பதை யாரும் மறக்க முடியது. சிகரத்தை தொடுவதற்காக மலையேறிய பலர் அதில் தங்களது இன்னுயிரையும் இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மலையேறுபவர்களின் மனநிலை மகிழ்ச்சிகரமானதாகவே இருக்கும். அந்த அனுபவம் உடலுக்கு வலியை தருவதாக இருந்தாலும், சேர்வு ஏற்பட்டாலும், அவர்களது தீராத வைராக்கியம், தீவிரம் இரண்டுமே சிகரத்தை தொடுவதில் தான் இருக்கும் என்கிறார் அல்டர். அவர்கள சிகரத்தை எட்டிவிட்டு பாதுகாப்பாக திரும்பினால் கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பரியது. ஆனால் அதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தி மீண்டும் அந்த முயற்சி மேற்கொள்ளும் எண்ணத்தை தோற்றுவிக்காமலேயே மறைந்து போகும். ஒரு புகழ்பெற்ற மலையேற்றக்காரர், “எவரைஸ்ட் சிகரத்தை நாம் வெல்லமுடியாது. எவரெஸ்ட் சிகரம் தன்னை நோக்கி வருவதற்கும் மலையேறுவதற்கும் மட்டுமே அனுமதி அளிக்கிறது”, என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தகத்தின் இறுதிக் கட்டமாக இமயமலையுடன் கூடிய இதிகாசங்கள், கலைகள் மற்றும் அதைச் சார்ந்த மிகப்பெரிய ஜாம்பவான்களின் எழுச்சி பற்றியும் கூறியுள்ளார். அங்கு வாழும் மக்களை பற்றியும் தெரிவித்துள்ளார். அவர்கள் மலையின் சிறப்புகளை கண்டறிபவர்களாகவோ, மலையேறும் நபர்களாகவோ, மலையேற்ற பயிற்சிக்கு செல்பவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் தவிர நில அளவையாளர்களாகவோ, தாவரவியல் வல்லுநர்களாகவோ, பறவைகள் பற்றிய ஆராய்ச்சியாளர்களாகவோ, விவசாயிகளாகவோ, கால்நடை மேய்ப்பவர்களாகவோ, முனிவர்களாகவோ உள்ளனர்.

நம் போன்ற பெரும்பான்மை மக்கள் ஆண்டுக்கொரு முறையாவது இமயத்தின் சுவாசத்தை கண்டிப்பாக சுவாசிக்க வேண்டும். நினைவு சின்னங்களாக விளங்கும் இது போன்ற மலைத் தொடர்கள் சில மூட நம்பிக்கைகளையும், மதம் சார்ந்த உத்வேகத்தையும் கொண்டிருக்கும். இமயமலை இந்து மதத்தையும், புத்தமதத்தையும், தன்னகத்தே கொண்டுள்ளது.

இமயலையையும், அதைச் சார்ந்துள்ள மக்களையும் ஆட்டிப்படைக்கும் பிரச்சனைகளான புவி வெப்பமயமாதல் முலம் திடீர் வெள்ளப்பெருக்கு, அங்குள்ள நதிகளின் வளமான நீரோட்டத்திற்கு நாம் ஏற்படுத்தும் பொறுப்பற்ற தடைகள், முறையற்ற வகையில் கட்டப்படும் அணைக்கட்டுகள் மூலம் உருவாகும். நிலநடுக்கம் மலையேறும் நபர்கள், சுற்றுலாவாசிகளால் ஏற்;படும் குப்பை மாசு, சுகாதாரகேடு, இயற்கையான காடுகள் அழிவு ஆதாயத்தை தரும் செயற்கை காடுகள் உருவாக்கம் போன்ற நிகழ்வுகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இமயமலைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கும் ஒவ்வொருவரின் கையிலும் இந்த புத்தகம் இருக்க வேண்டியது மிகவும்; அவசியம்;. இந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கினால், நமது மனம் அகண்ட அலை வரிசை போல இன்றைய அன்றாட நிகழ்வுகளிலிருந்து விலகி வெளி உலகிற்கு சென்றுவிடும். அவை பன்னெடுங் காலமாக மனிதர்களை ஈர்க்கும் சக்தியாக உள்ளன. இயற்கையின் சீதனமாக மலையழகும் உங்களை வந்து சேரும். இமயம் உங்களது தன்முனைப்பு எண்ணத்தை தரைமட்டமாக்கி தன்னோடு அமைதியாக இணைத்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

தமிழில் மொழி பெயர்த்தவர் : வளவன்

Himalaya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment