Will conditioner causes Hairfall Tamil News : ஹேர் கண்டிஷனர் நமது தலைமுடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும். இது அனைத்து வகையான கடினமான நிலையையும் உடனடியாக நீக்கும் என்பதில் மறுப்பதற்கில்லை. இருப்பினும், தலைமுடியில் கண்டிஷனரின் வழக்கமான பயன்பாடு முடி உதிர்தலை ஏற்படுத்தலாம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையா?
உண்மையில் தலைமுடிக்கான கண்டிஷனர் முடி உதிர்தலை ஏற்படுத்தாது. இதனை முடியின் மூன்றில் இரண்டு பங்குக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். கண்டிஷனரை முழுவதுமாக கழுவுவதை உறுதிப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம்.
ஹேர் கண்டிஷனர் உங்கள் தலைமுடிக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பது இங்கே.
*கண்டிஷனர் தலைமுடியை சீராக்குகிறது.
*வறண்ட பிளவுகளை மூடுகிறது.
*முடி பிளவுகளைக் கட்டுப்படுத்துகிறது.
*ஹீட்டர், ட்ரையர் உள்ளிட்ட முடியை சூடாக்கும் கருவிகளிலிருந்து பாதுகாக்கிறது.
*ஃபிரிஸ் மற்றும் உராய்வைக் குறைக்கிறது.
*பளபளப்பு மற்றும் மென்மையான தலைமுடியை அதிகரிக்கிறது.
இருப்பினும், உங்களுக்கு மிகவும் எண்ணெய்ப்பசை மற்றும் மெல்லிய முடி இருந்தால், உங்கள் தலைமுடியை மேலும் தட்டையாக மாற்றலாம் என்பதால் இவர்கள் மட்டும் கண்டிஷனரைத் தவிர்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil