கேஸ் ஸ்டவ் சிம்மில் வைத்தால் ஆஃப் ஆகுதா? இதை சரி செய்தால் போதும்… திகு திகுணு எரியும்!
உங்க கேஸ் அடுப்பு நல்லா எரியுது? ஆனால் சிம்ல வைக்கும்போது ஆஃப் ஆயிடுதா? இதற்கு என்ன காரணம், எப்படி வீட்லயே சரி செய்யலாம் என்பது குறித்து கடைக்குட்டி தம்பி என்ற யூடியூப் சேனலில் டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment
அடுப்பு நல்லா எரியுது. ஆனா சிம்ல வெக்கும்போது ஆஃப் ஆயிடுது. சின்ன அடுப்புல பிரச்சனை இல்ல, பெரிய அடுப்புலதான் இந்தத் தொல்லை என்றால், பெரிய அடுப்பின் ஸ்டிச்ச நேராக இருக்குமாறு தூக்கும்போது, கீழ ஒரு நட்டு இருக்கும். அத டெஸ்டர் வெச்சு கழட்டுங்க.நட்டு தனியா வந்ததும், மேல இருக்கற ஸ்பிரிங் சுவிட்சையும் எடுங்க. உள்ள ரோலர் மாதிரி இருக்கும். அதையும் வெளிய எடுங்க. இப்ப உள்ள பைப் மாதிரி இருக்கும். அதுல ரெண்டு ஓட்டை இருக்கும். ஓட்டை பெருசா இருக்கும், அது பவரா எரியிறதுக்கு. சின்ன ஓட்டைதான் சிம்ல எரியிறதுக்கு. சின்ன ஓட்டையில அடைப்பு இருந்தா சிம்ல எரியாது. அத ஊசி வெச்சு கிளீன் பண்ணுங்க. கிரீஸ் அடைச்சிருக்கும். நல்லா கிளீன் பண்ணிட்டு, லைட்டா கிரீஸ் தடவுங்க. எல்லாத்தையும் திரும்ப மாட்டி நட்டை டைட்-ஆ திருகுங்க. அடுப்ப ஆன் பண்ணி பாருங்க. சிம்லயும் எரியும், நேரா வெச்சாலும் தகதகனு எரியும்.
10 வருஷத்துக்கு மேல அடுப்பு யூஸ் பண்ணீங்கன்னா, வால்வு லூசா இருக்கும். அத மாத்தணும். வால்வு மாத்துற வீடியோவும் சீக்கிரமே வரும். இந்த வீடியோல சொன்ன மாதிரி செஞ்சா, உங்க கேஸ் அடுப்புல இருக்கற சிம் பிரச்னைய நீங்களே சரி பண்ணலாம்.