தமிழ்நாட்டில் உள்ள வாக்கியப் பஞ்சாகத்தில் விநாயகர் சதுர்த்தி செப்.18ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு செப்.18ஆம் தேதி விடுமுறை அளித்துள்ளது.
இந்த நிலையில் பஞ்சாங்க கணிப்பாளர்கள் செப்.18ஆம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி வருகிறது எனக் கூறுகின்றனர். இது தொடர்பாக ஜோதிடர் வெங்கட்ராமன், “இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்.18ஆம் தேதிவருகிறது.
அதாவது ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4ஆம் நாள் வருகிறது” என்றார்.
மயிலாடுதுறை சிவாச்சாரியார் சுவாமிநாதரும் இதனை தெரிவித்துள்ளனர். அவரின் கூற்றுப்படி சவுரமானம் சாந்திரமாதம் என இரு விதங்களில் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன.
அந்த வகையில் சாந்திரமானத்தில் விநாயகர் சதுர்த்தி வருகிறது. ஆகவே வளர்பிறை சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி. இது செப்.18ஆம் தேதிவருகிறது என்றார்.
இதனால் செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறையை செப்.18ஆம் தேதியாக மாற்றியறிவிக்க வேண்டும் என்றும் இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“