உங்கள் வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் அல்லது முகம் பார்க்கும் கண்ணாடிகள் மங்கலாக இருக்கிறதா? அவற்றைப் புதியது போல பளபளப்பாக மாற்ற ஒரு எளிய வழி இங்கே!
Advertisment
நீலம் கொண்டு கண்ணாடிகளைப் பளபளப்பாக்குங்கள்
ஒரு பௌலில் சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இரண்டு சொட்டு நீலம் (துணிகளுக்குப் பயன்படுத்தும் நீலம்) சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையை ஒரு சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு எடுத்து, உங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் அல்லது முகம் பார்க்கும் கண்ணாடிகள் எதுவாக இருந்தாலும், அதை நன்கு துடைத்து விடுங்கள்.
இது கண்ணாடிகளுக்கு ஒரு பிரகாசமான, பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்கும். கண்ணாடிகளில் சிறிய கீறல்கள் இருந்தால், அவை இந்தத் தந்திரத்தால் தெரியாமல் போகும்.
Advertisment
Advertisements
இந்த எளிய குறிப்பைப் பயன்படுத்தி, உங்கள் கண்ணாடிகளை எப்போதும் பளபளப்பாகவும், புதிது போலவும் வைத்துக்கொள்ளலாம்!