மழை மற்றும் குளிர் காலத்தில் ஜீரண சக்தி குறைந்துவிடும். இதனால், கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காய்கறி, அதிகமாகச் சாப்பிட வேண்டும். அவற்றையும் நன்றாகக் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும். பழங்களைப் பகல் வேளைகளில் சாப்பிடுவது நல்லது, என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
சாதாரணமாக நாம் குடிக்கும் சுக்கு, மல்லிக் காப்பி இந்தக் காலத்துக்கு மிகச் சிறந்த பானம். சுக்கு, மல்லியுடன் இரண்டு மிளகையும் பொடித்துச் சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது.
பால் பொருள்களைச் சளி பிடித்திருக்கும் நேரத்தில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது சளியின் அளவை அதிகரித்து, நோய்க் கிருமிகளின் தாக்கத்தையும் அதிகரிக்கச் செய்துவிடும். செரிமானமாகவும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதேநேரத்தில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருள்களை உட்கொள்ளலாம். அதிலும், பாலுடன் மஞ்சள் பொடி, சேர்த்துச் சாப்பிடலாம்.
செரிமானத்தை மேம்படுத்த வீட்டு வைத்தியம்
இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த வெந்நீரை குடிக்கவும்
ஒரு சிறிய துண்டு இஞ்சியை உப்பு சேர்த்து சாப்பிடுங்கள்
மசாலா மோர் இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்து குடிக்கவும்
குறிப்பாக குளிர்காலத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட மற்றும் சூடான உணவு ஜீரணிக்க எளிதானது.
அதேபோல, சாப்பிடும் முன் அதிக தண்ணீர் குடிக்கக் கூடாது. அது அமிலத்தை நீர்த்துப்போகச் செய்து அஜீரணத்தை ஏற்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“