Advertisment

விண்டர் ஸ்கின் கேர்: வறண்ட சருமத்துக்கு வீட்டில் நீங்களே செய்யக்கூடிய மாய்ஸ்சரைசர்

இது ஆழமாக மாய்ஸரைசர் செய்கிறது. சருமத்தை மென்மையாக்குகிறது. வறண்ட சருமத்திற்கு உதவுகிறது.

author-image
WebDesk
New Update
Winter skin care

Homemade moisturizer for dry skin

பருவகால மாற்றங்கள் காரணமாக, நம்மில் பலருக்கு சருமம் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது. அதிலும் குளிர்காலம் நம் சருமத்தை கடுமையாக பாதிக்கிறது, அது ஈரப்பதத்தை அகற்றி உலர வைக்கிறது. எனவே சீரான இடைவெளியில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதன் மூலம் இந்த பருவத்தில் உங்கள் சருமத்தை கவனிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

Advertisment

பிரபல பாலிவுட் சீரியல் நடிகை ஜூஹி பர்மர் நீங்களே வீட்டில் செய்யக்கூடிய மாய்ஸ்சரைசர் ரெசிபியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தேவையான பொருட்கள்

10-12 பாதாம், இரவு முழுவதும் ஊறவைத்தது

2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்

2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்

1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்

2 வைட்டமின் ஈ காப்ஸ்யூல்

எப்படி செய்வது?

ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி அரைக்கவும். அரைத்த பாதாமுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது வீடியோவில் காட்டியபடி பாதாமிலிருந்து தண்ணீரை மட்டும் வடிகட்டவும். இதில் கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து, வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்க்கவும். இது ஒரு பிரிசர்வெட்டிவாக செயல்படும்.

சுத்தமான, உலர்ந்த கன்டெய்னரில் சேமிக்கவும். 15 நாட்கள் வரை இந்த மாய்ஸரைசரை சேமித்து வைக்கலாம்.

நன்மைகள்

இது ஆழமாக மாய்ஸரைசர் செய்கிறது. சருமத்தை மென்மையாக்குகிறது. வறண்ட சருமத்திற்கு உதவுகிறது.

இந்த மாய்ஸ்சரைசர் சருமத்தின் நிறத்தை சீராக்குகிறது.

ஈரமான தோலில் மாய்ஸ்சரைசர் சிறப்பாக உறிஞ்சப்படுகிறது, ஏனெனில் இது உறிஞ்சுதலை இரட்டிப்பாக்குகிறது. மிக முக்கியமாக, இது இயற்கையானது மற்றும் ரசாயனங்கள் இல்லாதது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment