Advertisment

இந்த குளிர்காலத்தில் உங்க சருமத்துக்கு எந்த மாய்ஸ்சரைசர் நல்லது?

கூடுதலாக, வழக்கமான மாய்ஸ்சரைசிங் தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும், அதன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

author-image
WebDesk
New Update
skincare

Moisturizer skin type

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குளிர்காலத்தில் குளிர் குடியேறும்போது, ​​நமது சருமம் கொஞ்சம் கூடுதலான அன்பையும் கவனிப்பையும் கோருகிறது. எனவே உங்கள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள எண்ணற்ற மாய்ஸ்சரைசர்களுக்கு மத்தியில், சரியானதைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

Advertisment

குளிர்காலத்தில் பிரகாசமான சருமம், உங்கள் சருமத்தின் தனித்துவமான தேவைகளைப் புரிந்து கொள்வது மற்றும் அதன் தனித்துவமான பண்புகளைப் பூர்த்தி செய்வதில் உள்ளது, என்று டாக்டர் ரிங்கி கபூர் (consultant dermatologist and dermato-surgeon, The Esthetic Clinics) கூறுகிறார், ஏனெனில் சுற்றுச்சூழல் காரணிகள் குறிப்பாக கடுமையானவை.

குளிர்காலம் ஈரப்பதத்தின் அளவைக் குறைக்கிறது, இது வறண்ட காற்றுக்கு வழிவகுக்கிறது, இதனால் தோல் அதன் ஈரப்பதத்தை இழந்து வறட்சி, உதிர்தல் மற்றும் சென்சிட்டிவ் போன்ற பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். மாய்ஸ்சரைசர் ஒரு தடையாக செயல்படுகிறது, ஈரப்பதத்தை  லாக் செய்கிறது மற்றும் சருமத்தில் இருந்து நீர் இழப்பைத் தடுக்கிறது என்று, டாக்டர் கபூர் கூறினார்.

கூடுதலாக, வழக்கமான மாய்ஸ்சரைசிங் தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும், அதன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

நீங்கள் வறண்ட அல்லது எண்ணெய் வழியும் சருமத்தை எதிர்த்துப் போராடினால், குளிர்காலம் முழுவதும் உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உறுதியளிக்கும் மாய்ஸ்சரைசர் தேர்வுகளை ஆராய்வோம்.

உங்கள் தோல் வகையின் அடிப்படையில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய மாய்ஸ்சரைசர்

சாதாரண தோல் (Normal skin)  

சாதாரண சருமம் உள்ளவர்கள், சருமத்தை அதிக எண்ணெய் பசையாக்காமல், நீரேற்றத்தை பராமரிக்கும் சமநிலையான மாய்ஸ்சரைசரை தேர்வு செய்ய வேண்டும். லைட்வெயிட் நான் கிரிஸீ பார்முலா போதுமானது.

எண்ணெய் சருமம் (Oily skin)

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் மாய்ஸ்சரைசேஷன் தேவைப்படலாம். போதுமான ஹைட்ரேஷன் உறுதி செய்யும் போது அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைத் தடுக்க ஆயில் ஃபிரி ஹைட்ரேடிங் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்.

வறண்ட சருமம் (Dry skin)

குளிர்காலம் வறட்சியை அதிகப்படுத்தும். வறண்ட சருமம் உள்ளவர்கள், ஹைலூரோனிக் ஆசிட் அல்லது கிளிசரின் போன்ற பொருட்கள் கொண்ட ரிச்சர், கிரீமியர் மாய்ஸ்சரைசர் தேர்வு செய்ய வேண்டும்.

காம்பினேஷன் தோல் (Combination skin)

காம்பினேஷன் தோல் உள்ளவர்களுக்கு (சில பகுதிகள் எண்ணெயாகவும் மற்றவை வறண்டு இருக்கும்), பல்துறை அணுகுமுறை அவசியம். எண்ணெய் பகுதிக்கு லைட் மாய்ஸ்சரைசரையும், வறண்ட இடத்தில் ரிச்சர் மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்தவும்.

சென்சிட்டிவ் ஸ்கின்

சென்சிட்டிவ் சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவை. சாத்தியமான எரிச்சலைத் தவிர்க்க, நறுமணம் இல்லாத, ஹைபோஅலர்கெனி மாய்ஸ்சரைசரைத் தேர்ந்தெடுக்கவும். சருமத்தை ஆற்றவும் அமைதிப்படுத்தவும் கெமோமில் அல்லது கற்றாழை போன்ற மூலப் பொருட்கள் மாய்ஸ்சரைசரில் உள்ளதா என்று பாருங்கள்.

உங்கள் தோல் வகை மற்றும் குளிர்காலம் கொண்டு வரும் குறிப்பிட்ட தேவைகளைப் புரிந்துகொள்வது பயனுள்ள தோல் பராமரிப்புக்கு அவசியம். சரியான மாய்ஸ்சரைசரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், குளிர்ந்த மாதங்கள் முழுவதும் உங்கள் சருமம் நீரேற்றமாகவும், ஆரோக்கியமாகவும், மீள்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்யலாம்.

Read in English: Choose a moisturiser according to your skin type this winter

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment