உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் காய்களில் வெண்டைக்காயும் ஒன்று. இந்த வெண்டைக்காயை கடையில் இருந்து வாங்கி வந்த உடனே சமைத்துவிட வேண்டும். அப்படியே வெளியே வைத்திருந்தால் வாடிவிடும். இல்லாவிட்டால் ஃபிரிட்ஜில் வைத்திருந்தாலும் குறைந்த பட்சம் 2 3 நாட்களிலாவது சமைத்துவிட வேண்டும். அதற்கு மேல் வெண்டைக்காய் தாங்காது. அப்படியே வைத்திருந்தால், வெண்டைக்காய் கருத்து முற்றி ஒரு மாதிரியாக சமைக்க முடியாத அளவுக்கு மாறிவிடும்.
ஆனால், இந்த வாடிய வெண்டைக்காய் 10 நிமிடத்தில் செம்ம ஃப்ரெஷ்ஷாக மாறிவிடும், இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க, வாடிய வெண்டைக்காயை ஃப்ரெஷ்ஷாக்கி சமையுங்கள்.
வெண்டைக்காய் வாடிவிட்டதா கவலைப் படாதீர்கள், அந்த உங்கள் வீட்டில் ஃபிரிட்ஜில் ஐஸ் கியூப் தயார் செய்து அதில் இருந்து 3-4 ஐஸ் கியூப் எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் சமைக்க வேண்டிய வாடிய வெண்டைக்காய் உடன் ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அதில் வெண்டைக்காய் அமிழ்ந்தும்படி தண்ணீர் ஊற்றுங்கள். ஒரு 10 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள் அவ்வளவுதான்.
வாடிய வெண்டைக்காய் 10 நிமிடத்தில் நீங்கள் அந்த வெண்டைக்காயை கடையில் இருந்து வாங்கி வரும்போது எப்படி ஃப்ரெஷ்ஷாக இருந்ததோ அதே போல ஃப்ரெஷ்ஷாகி இருக்கும். உங்கள் வீட்டில் இந்த ட்ரிக்கை பயன்படுத்தி வாடிய வெண்டைக்காயை ஃப்ரெஷ்ஷாக்குங்கள்.