காற்று, தண்ணீர், பூமி, தாவரம், உண்ணும் காய் கனிகள் என நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஆத்மார்த்தமாக அணுகினால் உங்கள் வாழ்வு மிக அழகாக மாறும். ஆரோக்கியமான உடல் நலத்துக்கு உன்னதமான இயற்கை உணவே அஸ்திவாரம் என்பார்கள் நம் முன்னோர்கள்.
Advertisment
ஆனால் நாம் உணவே மருந்து என்ற வாழ்வியலை மறந்து, நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆரோக்கியமற்ற உணவு முறைகளை பின்பற்றி வருகிறோம். இதனால் பல நோய்கள் ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளோம்.
திருச்சியில் ஆரோக்கியமான உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அடுப்பில்லா சமையல் என்ற பெயரில் Talam shop மற்றும் அறுசுவை ஆற்றல் இணைந்து நடத்திய அடுப்பில்லா சமையல் போட்டி நடைபெற்றது.
விதவிதமாக சாப்பிடும் வழக்கத்துக்கு இடையில் வாரத்தில் ஒரு நாளாவது எளிய உணவைச் சாப்பிடலாம். இதற்காகத்தான் பண்டிகை, விசேஷ நாட்களில் விரதம் இருக்கும் முறையைப் பலரும் கடைப்பிடித்தனர்.
Advertisment
Advertisements
சமைக்காத உணவுக்கும் நாம் அடிக்கடி இடம் தரலாம். இதனால் ஆரோக்கியம் மேம்படுவதுடன் வழக்கமான உணவிலிருந்து விடுதலை பெறலாம். அடுப்பில்லாமல் செய்யக்கூடிய உணவு வகைகள் குறித்த சமையல் போட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைந்திருந்தது.
போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும், முட்டைகோஸ் சமோசா, ஹெல்த்தி மயோனிஸ், வேக வைக்காத இட்லி, தயிர் இல்லா தயிர் சாதம், குக்கர் இல்லா பிரியாணி, கசகசா அல்வா போன்ற ஆரோக்கியமான அடுப்பில்லா இயற்கை உணவு வகைகளை தயாரித்து அசத்தினர்.
மாஸ்டர் செஃப் டைட்டில் வின்னர் தேவகி,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றோர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
இதில் முதல் பரிசு தீக்ஷித்தா என்பவருக்கும், இரண்டாம் பரிசு சித்ரா என்பவருக்கும், மூன்றாம் பரிசு ஜனனி என்பவருக்கும் கிடைத்தது.
அறுசுவை ஆற்றல் நிறுவனர் சரண்யா இந்த போட்டி குறித்து கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு என்பது இன்றியமையாததாகும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற போட்டிகளை நடத்தி வருகிறோம் தொடர்ந்து இது போன்ற போட்டிகளை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“