மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் இதனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு நாம் சில உணவுகளை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும்.
கீரை, கேல், கேபேஜ், புரொக்கோளி உள்ளிட்டவற்றை நாம் சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் உள்ளது. இவை எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இந்நிலையில் இதில் வைட்டமின் சி உள்ளது. இவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும்.
குறைந்த எடைகளை வைத்து உடல் பயிற்சி செய்யும்போது எலும்புகள் வலுப்பெறும். நடைபயிற்சி மற்றும் ஆரோபிக்ஸ் உள்ளிட்ட உடல் பயிற்சி செய்வதும் முக்கியமாகிறது.
கால்சியம் நிறைந்த உணவுகள். பால், சீஸ் உள்ளிட்ட உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். தசைகளை வளர்க்கவும், நரம்புகளின் செயல்பாடுகளை செய்யவும் உதவும். சீராக ரத்த அழுத்தத்தை வைத்துகொள்ளவும், ஹார்மோன்கள் அளவு சீராகவும் இருக்க உதவுகிறது.
புரத சத்து நிறைந்த உணவுகளான டோப்பூ, பிளாக்ஸ் விதைகள், கொண்டைக்கடலை சாப்பிட்டால் ஈஸ்டோஜென் அளவை அதிகமாக்க உதவும். எலும்புகளை உருவாக்கும் செல்களை இவை உருவாக்குகிறது. இந்நிலையில் முன்கை எலும்பு முறிவை இது தடுக்கும். மேலும் இடுப்பு மற்றும் தண்டுவடத்தில் ஆரோக்கியமான எலும்புகளின் அடர்த்தி இருக்கும்.
சீரான உடல் எடையை நாம் தொடர்ந்து நீக்க வேண்டும். இதுவும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“