பெண்களுக்கு சிறு தொழில் துவங்க உதவி தொகை வழங்கி நெகிழ்ச்சி. பெண் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவரும் அழகிய முன் மாதிரி அறக்கட்டளையின் நிறுவனருமான ஃபாத்திமா சபரிமாலா தலைமையில் முழுவதும் இஸ்லாமிய பெண்கள் ஒருங்கிணைத்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கோவை தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.

தமிழக அரசின் சிறுபான்மை துறையினருடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில். பல்வேறு ஜமாத் கூட்டமைப்பினர்,தன்னார்வலர்கள்,என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண்கள் சுமார் 25 பேருக்கு சிறு தொழில் துவங்க பத்தாயிரம் வீதம் இரண்டரை இலட்சம் ரூபாய் நிதி உதவி தொகை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இதே போல ஏழை இஸ்லாமிய குடும்பத்தினருக்கு ரம்ஜான் பண்டிகை பிரியாணி கிட் வழங்கப்பட்டது.இதில் பிரியாணி வைப்பதற்கு தேவையான அரிசி,நெய்,சமையல் எண்ணெய் உள்ளிட்டவை அடங்கிய மளிகை பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.

பெண்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பெண்களுக்காக நிதி உதவி வழங்கிய மகளிர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை