Peeing and pelvic floor | Indian Express Tamil

குதிக்கும் போது சிறுநீர் கசிவு அல்லது வலி.. பெண்களே இதை நோட் பண்ணுங்க

முதலில், இதுபோன்ற நிலைமைகள் இருப்பது பொதுவானது என்றாலும், இது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. வயதுக்கு ஏற்ப பிரச்சினை மோசமாகிறது.

lifestyle
Do you pee or have pain while jumping?

காலப்போக்கில், பெண்கள் மற்றும் புதிய தாய்மார்கள் பல உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இன்று நாம் இங்கு பேச உள்ள பிரச்சனை மிகவும் பொதுவான ஒன்றாக மாறுகிறது – 3ல் ஒரு பெண் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார், மேலும் இது வயதுக்கு ஏற்ப மோசமாகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர் நிதி ஷர்மா கூறுகிறார். ஆனால் தீர்வு எட்டக்கூடியதாக தெரிகிறது: அதற்கு தேவையானது வலுவான இடுப்பு பகுதி மற்றும் மையப்பகுதி மட்டுமே. எனவே, கீழே உள்ள அனைத்தையும் பற்றி அறிந்து கொள்வோம்.

குதிக்கும் போது சிறுநீர் கசிகிறதா அல்லது வலிக்கிறதா? சுகப் பிரசவித்த பெண்களுக்கு இடுப்புத் தளத்தின் செயலிழப்பு காரணமாக சிறுநீர் கசிவு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

முதலில், இதுபோன்ற நிலைமைகள் இருப்பது பொதுவானது என்றாலும், இது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. வயதுக்கு ஏற்ப பிரச்சினை மோசமாகிறது. எனவே, அதை ஒப்புக்கொண்டு மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது நல்லது, என்று நிதி ஷர்மா கூறினார்.

இதை ஒப்புக்கொண்ட டாக்டர் ஷோபா குப்தா, கர்ப்பம், பிரசவம், புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சை, உடல் பருமன் மற்றும் தொடர்ச்சியான மலச்சிக்கல் ஆகியவை இடுப்புத் தளத்தை வலுவிழக்கச் செய்யும் என்றார்.

இருமும்போது, ​​தும்மும்போது, ​​சிரிக்கும்போது அல்லது ஓடும்போது சிறுநீர் கசிவு, குனிந்து அல்லது தூக்கும்போது ஆசனவாய் அல்லது பிறப்புறுப்பில் இருந்து காற்று வருவது, பெண்ணுறுப்பில் உணர்வு குறைதல், யோனியில் கனமான உணர்வு, மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், மற்றும் கருப்பை வலி, உடலுறவின் போது வலி மற்றும் உச்சக்கட்டத்தை அடைய இயலாமை ஆகியவை ஆகியவை இடுப்புத் தள தசைச் செயலிழப்பின் அறிகுறிகள் என்று டாக்டர் குப்தா கூறினார்.

என்ன செய்ய வேண்டும்?

இடுப்புத் தளம் மற்றும் முக்கியத் தசை பயிற்சிகள் அவசியம் என்று சர்மா பட்டியலிட்டார்.

எளிய பெல்விக் ஃபுளோர் பயிற்சிகளை (Kegels, glute bridges, squats and squeezing) செய்யத் தொடங்குங்கள் – நீங்கள் சிறுநீர் கழிப்பதைப் போல உங்கள் சிறுநீர்ப்பையை அழுத்துங்கள். இந்த பயிற்சிகளைச் செய்யும்போது ஒருவர் சுவாசம் மற்றும் முக்கிய தசைகளை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

பிரசவத்திற்குப் பிறகு சில வாரங்களுக்குப் பிறகு reverse plank, bird-dog, dead bug, superman போன்ற எளிய மையப் பயிற்சிகளை, உங்கள் மருத்துவரின் ஒப்புதலுடன் தொடங்கலாம்.

அதிக எடை, இடுப்பு தசைகள் மீது அழுத்தத்தை சேர்க்கும். எனவே, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும், ஒரு நல்ல பயிற்சி முறையைப் பராமரிப்பதன் மூலமும் உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், என்று சர்மா கூறினார்.

பயிற்சிகளைக் கற்றுக் கொள்ளும்போது, ​​ஒவ்வொரு நாளும் ஐந்து அல்லது ஆறு அமர்வுகளை திட்டமிட முயற்சிக்க வேண்டும் என்று டாக்டர் குப்தா பகிர்ந்து கொண்டார். இந்த உடற்பயிற்சிகளை சரியாகச் செய்வது முக்கியம்.

நீங்கள் அவற்றைச் சரியாகச் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, உங்கள் மருத்துவர், இடுப்பு ஆரோக்கியத்திற்கான பிசியோதெரபிஸ்ட் அல்லது கான்டினென்ஸ் ஆலோசகரைப் பார்க்கவும். நீங்கள் முழுமையாகப் புரிந்து கொண்ட பிறகு ஒரு நாளைக்கு மூன்று உடற்பயிற்சிகள் போதுமானது, என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Women health peeing and pelvic floor