சிறுநீர் தானாக வெளியேற என்ன காரணம்? சிகிச்சை என்ன? மருத்துவர் பதில்
நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான தேசிய நிறுவனம் (NIDDK) படி, ஆண்களை விட பெண்கள் சிறுநீர் தானாக வெளியேறுவதால் பாதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான தேசிய நிறுவனம் (NIDDK) படி, ஆண்களை விட பெண்கள் சிறுநீர் தானாக வெளியேறுவதால் பாதிக்கப்படுகின்றனர்.
சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த இயலாமை என்பது சிறுநீர் அடங்காமையின் (stress urinary incontinence) அறிகுறியாக இருக்கலாம், இந்த நிலையில் ஒருவர் அடிவயிறு மற்றும் சிறுநீர்ப்பையில் அல்லது உடல் செயல்பாடுகளின் போது ஏற்படும் எந்த அழுத்தத்திலும் சிறுநீர் கசிவை அனுபவிக்கலாம்.
Advertisment
மகப்பேறு மருத்துவர் சுஷ்ருதா மொகடம் கருத்துப்படி, சிறுநீர் அடங்காமை கடுமையானதாக இருந்தால், ஒருவர் எழுந்து நிற்கும் போது, நடக்கும் போது அல்லது குனிவது போன்ற லேசான உடல் செயல்பாடுகளின் போது கூட சிறுநீர் கசியலாம்.
சிறுநீர்ப்பைக்குள் சிறுநீரை கசிவு இல்லாமல் வைத்திருக்க, நீங்கள் உங்கள் ஸ்பைன்க்டரை (sphincter) சுருங்கச் செய்ய வேண்டும். இருப்பினும், உங்கள் ஸ்பிங்க்டர் மற்றும் இடுப்பு தசைகள் பலவீனமாக இருக்கும்போது, இந்த தசைகளை சுருக்குவது மிகவும் கடினம், இது சிறுநீர் தானாக வெளியேறுவதற்கு (SUI) வழிவகுக்கும் என்று அவர் விளக்கினார்.
உடல் செயல்பாடுகளின் போது சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழப்பது இதன் முக்கிய அறிகுறியாகும், இதில் பின்வருவன அடங்கும்:
Advertisment
Advertisements
*சிரிக்கும் போது
* இருமல்
* குதிக்கும் போது
* வெயிட் தூக்கும் போது
*உடலுறவில் ஈடுபடும் போது
யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?
நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான தேசிய நிறுவனம் (NIDDK) படி, ஆண்களை விட பெண்கள் சிறுநீர் தானாக வெளியேறுவதால் பாதிக்கப்படுகின்றனர்.
பிரசவம் மற்றும் கர்ப்பம், பெண்களிடையே சிறுநீர் அடங்காமையின் மிகவும் பொதுவான காரணங்கள். ஏனெனில் இந்த காலகட்டத்தில் ஸ்பிங்க்டர் மற்றும் இடுப்பு தசைகள் நீண்டு வலுவிழந்து விடுகின்றன.
இதையும் சேர்த்து உடல் பருமன், நாள்பட்ட இருமல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவையும் சிறுநீர் கசிவை ஏற்படுத்தும். இடுப்பு காயம், ப்ரோஸ்டேட் அறுவை சிகிச்சை மற்றும் சுகப்பிரசவம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறுநீர் அடங்காமை (SUI) ஏற்படும் அபாயம் அதிகம்.
சிறுநீர் அடங்காமைக்கான பிற ஆபத்து காரணிகள்:
*அதிகப்படியான காஃபின் மற்றும் ஆல்கஹால் பயன்பாடு
*மலச்சிக்கல்
*ஹார்மோன் குறைபாடுகள்
சிகிச்சை
முக்கிய விஷயம் என்னவென்றால், பிரச்சினையின் காரணத்தை அடையாளம் காண்பது. அதன்படி, உங்கள் மருத்துவர் ஒரு சிகிச்சைத் திட்டத்தைக் கொண்டு வந்து, மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை பரிந்துரைப்பார்.
* நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், உங்கள் மருத்துவர் உடல் எடையை குறைக்க பரிந்துரைக்கலாம்.
*நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், நிகோடின் உங்கள் சிறுநீர்ப்பையை எரிச்சலடையச் செய்யும் என்பதால் நீங்கள் அதை விட்டுவிட வேண்டும்.
*கெகல் பயிற்சிகள் (Kegel) உட்பட இடுப்பு தசை பயிற்சி உங்கள் ஸ்பிங்க்டர் மற்றும் இடுப்பு தசைகளை வலிமையாக்கும்.
*ஓரல் மற்றும் டாப்பிக்கல் ஈஸ்ட்ரோஜன் சப்ளிமெண்ட்ஸ் இரண்டும் பெண்களுக்கு உதவக்கூடும்.
*உங்களுக்கு கடுமையான நோய் இருந்தால், உங்கள் மருத்துவர் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.
இப்படி நிலையின் தீவிரத்தை பொறுத்து சிறுநீர் அடங்காமைக்கு சிகிச்சையளிக்க பல வழிகள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“