மாதவிலக்கு அல்லது மாதவிடாய் சுழற்சி பெரும்பாலும் தசைப் பிடிப்புகளுடன் தொடர்புடையது. இந்த தசைப் பிடிப்புகள் சுகவீனத்தை ஏற்படுத்துவதுடன், பல்வேறு வகையான உடல் வலிக்கும் காரணமாகிறது
சில உணவுகள் வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சில வகையான உணவுகள் வலியை அதிகரிக்கலாம். எனவே ஒவ்வொரு மாதமும் அந்த நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என நிறைய பெண்கள் நம்புகின்றனர்.
ஆனால் மாதவிடாய் காலத்தில் முட்டை சாப்பிடலாமா? நீங்கள் ஒரு முட்டை பிரியர் மற்றும் மாதவிடாய் காலத்தில் முட்டைகளை சாப்பிடலாமா, வேண்டாமா என்ற கவலை இருந்தால், தெரிந்துகொள்ள படிக்கவும்.
மாதவிடாய் என்பது எந்தவொரு பெண்ணுக்கும் வலிமிகுந்த கட்டமாகும், ஏனெனில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பிடிப்புகள், முதுகுவலி, மனநிலை மாற்றங்கள், குமட்டல் மற்றும் பிற ஒத்த நிலைமைகளை அனுபவிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் கவனம் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் சில உணவுகள் பிடிப்புகளை மோசமாக்கும்.
அதிர்ஷ்டவசமாக முட்டைகள் அந்த வகையில் வராது. மாதவிடாய் காலத்தில் முட்டைகளை உட்கொள்ள கூடாது என்பது கட்டுக்கதை.
பி6, டி மற்றும் ஈ போன்ற வைட்டமின்களின் களஞ்சியமாக முட்டைகள் உள்ளன, இவை அனைத்தும் பிஎம்எஸ் அறிகுறிகளை எதிர்த்துப் போராடுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? முட்டைகள் புரதத்தின் வளமான மூலமாகும், மேலும் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
முட்டை நன்மைகள்
முட்டை கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்பது கட்டுக்கதை. முட்டை உங்கள் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை மேம்படுத்தும். மிதமான அளவில், முட்டைகளை தவறாமல் உட்கொள்வது, உண்மையில் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். ஒரு முட்டையில் 125.5 மில்லிகிராம் கோலின் உள்ளது, இது உங்கள் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் முட்டைகள் உதவும்.
எனவே இனி மாதவிடாய் காலங்களில் பயமின்றி உங்களுக்கு பிடித்த முட்டை ரெசிபிகளை செய்து சாப்பிடுங்கள்!
இந்த நேரத்தில் உண்மையில் உதவக்கூடிய சில உணவுகள் இருந்தாலும், இன்னும் சிலவற்றைத் தவிர்க்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர் ரோகினி பாட்டீல், முன்பு indianexpress.com உடன் பகிர்ந்துள்ளார், பொரித்த உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் உட்பட ஆயத்த தின்பண்டங்களை ஒருவர் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றில் உப்பு மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. இதை அதிகம் உட்கொள்வது மாதவிடாய் காலத்தில், வீக்கத்துக்கு வழிவகுக்கும் நீர் தேக்கத்தை ஏற்படுத்துகிறது.
அத்துடன் காபி மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பதும் நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“