ஒழுங்கற்ற மாதவிடாய் பொதுவாக இருக்கலாம், ஆனால் பிரச்சனையை புறக்கணிப்பதற்கு பதிலாக, மூல காரணத்தை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை தொடங்குவது அவசியம்.
Advertisment
ஒழுங்கற்ற மாதவிடாய் சாதாரணமானது அல்ல. மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால் பரவாயில்லை, திருமணத்திற்குப் பிறகு அல்லது காலப்போக்கில் தானாகவே குணமாகும் என்று உங்களுக்குச் சொல்லும் சீரற்ற அறிவுரைகளை நம்ப வேண்டாம்.
இந்த ஆலோசனைகள் பல தசாப்தங்களுக்கு முன்பு சில சூழல்களில் வேலை செய்திருக்கலாம். ஆனால், இன்றைய உலகில் 10ல் 6 பெண்கள் PCOD போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இது ஹார்மோன் கோளாறுகளின் விளைவாகும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்கள், உங்கள் மாதவிடாயின் இயல்பான முறையை சீர்குலைக்கும். இது பல வாழ்க்கை முறை பிரச்சனைகளால் ஏற்படலாம்.
ஒழுங்கற்ற மாதவிடாய் சில வாழ்க்கை முறை பழக்கங்களின் விளைவாக இருக்கலாம்:
* தவறான உணவுப் பழக்கம்
* ஒழுங்கற்ற தூக்கம்
* அதிகளவு மன அழுத்தம்
* பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்ளுதல்
* சில மருந்துகளின் காரணமாகவும் இருக்கலாம்
உங்கள் மாதவிடாய் தவறினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்
*மகளிர் மருத்துவ நிபுணரை சந்தித்து, உங்கள் பிரச்னை குறித்து கலந்து ஆலோசியுங்கள்
*உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்
*நல்ல அளவு புரதச்சத்துள்ள சத்தான உணவை உட்கொள்ளுங்கள்
*நன்றாக தூங்குங்கள் மற்றும் உங்கள் சர்க்காடியன் சுழற்சியை இயற்கையான சூரிய சுழற்சியுடன் சீரமைக்க முயற்சிக்கவும். சீக்கிரம் எழுந்து சீக்கிரம் தூங்க முயற்சி செய்யுங்கள்.
காலை மற்றும் நாள் முழுவதும் நல்ல சூரிய ஒளி வெளிப்பாடு, நல்ல தூக்கத்தைப் பெற எளிதான வழியாகும். சூரிய ஒளியில் இருக்கும் போது சாப்பிடுவதால் செரிமானம் நன்றாக இருக்கும். எனவே இரவு உணவை இரவு 7 மணிக்குள் முடித்து விடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“