எலுமிச்சை, முட்டை, தயிர்… பெண்கள் இந்த வயதில் எடுக்க வேண்டிய உணவுகள் இவைதான்!

Healthy food for women: ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியைப் பெறுவது அவர்களுக்கு மிகவும் உதவி அளிக்கும்

Immunity-boosting foods for women over 40 - 40 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ண வேண்டிய

Women health tips in tamil : 40 வயதிற்குப் பிறகு உடல் எடையை குறைப்பது கடினம் மற்றும் சாத்தியமற்றது என்று நிறைய பெண்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், இது ஒரு கட்டுக்கதை, சரியான உணவு வகைகளை உட்கொண்டு உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை ஈஸியாக குறைத்து விடலாம். மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முற்றிலும் சாத்தியம் என்பதை பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ரோஹித் ஷெலட்கர் கூறுகிறார்.

“பெரும்பாலான பெண்களுக்கு 40 வயதிற்குப் பிறகு, ஊட்டச்சத்து தேவைகள் அதிகரிக்கின்றன. ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியைப் பெறுவது அவர்களுக்கு மிகவும் உதவி அளிக்கும். புகைபிடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் ஆல்கஹால் அல்லது ஃபிஸி பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது மாதவிடாய் அறிகுறிகளை எளிதில் கண்டறிய அவர்களுக்கு உதவுகின்றன . இதை தவிர, காரமான, வறுத்த உணவுகளைத் தவிர்ப்பதும் பரிந்துரைக்கப்படுவதாக” வைட்டாபயாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ரோஹித் ஷெலட்கர் குறிப்பிடுகின்றார்.

சியா விதைகள்:

சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், எலும்புகளுக்கு வலு தரும் மெக்னீசியம் மற்றும் புரத சத்துக்கள் உள்ளன. சியா விதைகள் தண்ணீரை நன்றாக உறிஞ்சுவதால், எதிர்பாராமல் ஏற்படும் பசி வேதனையை எளிதில் கட்டுப்படுத்த உதவுகின்றது. சியா விதைகளை காலை அருந்தும் சிற்றுண்டிகளில் சேர்த்து உண்டால் உடலுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும்.

சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்கள் என்பது ஆரஞ்சு பழம், திராட்சைப்பழம், மற்றும் எலுமிச்சை பழம் ஆகும். இவைகளில் சுண்ணாம்புச் சத்து அதிகமாகவே காணப்படுகின்றன. அதோடு ஆக்ஸிஜனேற்றிகள், ஃபைபர், வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. அவை மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், எடை இழப்புக்கு உதவவும், இதயத்தை பாதுகாக்கவும், மற்றும் சருமத்தை கதிரியக்கத்தில் இருந்து தோல்களை பாதுகாக்கவும் உதவுகின்றன.

 

 

 

முட்டை:
முட்டையில் வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகின்றன. பெரும்பாலும் ஊட்டச்சத்து இல்லாத பெண்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முட்டை ஒரு சிறந்த புரத சத்தாக பயன்படுகின்றது. இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும், இதய நோய் ஆபத்திலிருந்து பாதுகாக்கவும் மற்றும் உடல் பருமனை குறைக்கவும் உதவுகின்றது. இதில் மிதமான கொழுப்பு, அதிக புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைந்த அளவு சர்க்கரை ஆகியவற்றை கொண்டிருப்பதால் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு முட்டை ஒரு சிறந்த தேர்வாக அமைகின்றது.

எண்ணெய் மீன்கள்:
எண்ணெய் மீன்களக அறியப்படும் சால்மன் மற்றும் சூரை போன்றவற்றில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகளை தினமும் உட்கொள்ள வேண்டும். இவை பெண்களின் உடலில் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. அவை மூளை, இதயம் மற்றும் மூட்டு போன்றவைளுக்கு உதவிபுரிகின்றன. ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட மீன்கள் பசியை அதிக நேரம் தாங்குகின்றன. எண்ணெய் மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவுகளை குறைக்க உதவுகின்றது.

கடலை பருப்புகள் (நட்ஸ் ):
கடலை பருப்புகள் (நட்ஸ்) எடை இழப்புக்கு உதவுகின்றது. இவைகளை ஒரு சிற்றுண்டியாக உண்ணலாம். ஏனெனில் இவைகளில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகின்றது. ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அதிக அளவு புரத சத்துக்களை கொண்டுள்ளது.

கேரட்:
கேரட்டில் வைட்டமின் ஏ நிரம்பிய உள்ளது. இது சருமத்தை மென்மையாகவும், பார்வையை கூர்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து உள்ளதால் இருண்ட புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பருவை எதிர்த்துப் போராட உதவுகின்றது.

ஆப்பிள்:
ஆப்பிள் உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புகளை உறிஞ்சுவதைக் குறைக்க உதவுகின்றது. தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் இதயம் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.

தயிர்:
தயிரில் கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்து காணப்படுகின்றன. இது ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். குடல் சம்மந்தமான பிரச்சனைகளை நீக்குகின்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Women health tips in tamil lemon egg yogurt women need to take foods for immunity boosting

Next Story
தூர்தர்ஷனில் முதல் சீரியல்.. வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் சுஜிதாவை தெரியாதவர்கள் இல்லை!pandian stores dhanam vijay rv pandian stores
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com