scorecardresearch

ஆப்பிள் முதல் வெந்தயம் வரை: 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டியவை!

40 வயதைத் தாண்டிய பிறகு, பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க மாற்றங்கள் இருப்பதைப் போலவே, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தில் மாற்றம் தேவை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அவ்னி கவுல்.

Women Health Tips
Nutritionist shares Best foods for women over 40

“ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நாற்பது என்பது ஒரு மைல்கல் வயது, அதன் பிறகு அவளுடைய ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் வளர்சிதை மாற்றம் (உணவை ஆற்றலாக மாற்றும் உடலின் திறன்) படிப்படியாக மாறத் தொடங்குகிறது. மேலும், உயிரியல் மட்டத்தில், இனப்பெருக்க சுழற்சி குறையத் தொடங்குகிறது. எனவே, ஒவ்வொரு பெண்ணும் தனது 40 வயதிற்குள் நுழைந்தவுடன், ஆரோக்கியமாகவும், நோயின்றிவும் இருக்க தினசரி உணவைக் கவனித்துக்கொள்வது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர் அவ்னி கவுல் கூறுகிறார்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற், 40 வயதைத் தாண்டியவுடன், ஒரு பெண் தனது தினசரி உணவில் சேர்க்க முயற்சிக்க வேண்டிய சில உணவுகளை நிபுணர் பரிந்துரைத்தார்.

க்ரீன் டீ

க்ரீன் டீ ஒரு சிறந்த பானமாகும், இது ஆண் மற்றும் பெண் இருவரின் உடல் வளர்சிதை மாற்றத்தை உகந்த அளவில் வைத்திருக்கும்.

க்ரீன் டீயில் உள்ள கேடசின்கள் (catechins) ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும், அவை தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜன் ரேடிக்கல்களைத் தடுக்க உதவுகின்றன, மேலும் செல்கள், டிஎன்ஏ மற்றும் செல்லுலார் செயல்பாடுகளுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தை எதிர்க்கின்றன. நீங்கள் கிரீன் டீயை சரியான முறையில் தயாரிக்கும்போது, ​​​​ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.

எனவே, 40 வயதிற்குப் பிறகு, ஆற்றல் அளவுகள் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றுடன் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த, வழக்கமான பால் டீ அல்லது காபியை’ க்ரீன் டீயுடன் மாற்ற முயற்சிக்கவும்.

ஆப்பிள்

40 வயதிற்குப் பிறகு, ஆண்களும், பெண்களும் தங்கள் அன்றாட உணவில் சீசனல் பழங்களைச் சேர்க்க வேண்டும். ஆப்பிள் சிறந்த ஆக்ஸிஜனேற்ற உணவுகளில் ஒன்றாகும். இவை

ஆப்பிள் ஃபிளாவனாய்டுகள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்தவை, உடலின் அழற்சியைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன, வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகின்றன, கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன.

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவுகிறது.

புரதம் நிறைந்த உணவுகள்

40 முதல் 50 வயதுடைய, சராசரி பெண் உடலுக்கு, தசை இழப்பைத் தடுக்க, ஒரு நாளைக்கு, ஒரு கிலோ உடல் எடையில் 0.8 கிராம் புரதம் தேவைப்படுகிறது. குறிப்பாக உட்கார்ந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தால், தசை புரத தொகுப்பு குறைகிறது. எனவே 40 க்குப் பிறகு போதுமான தினசரி புரத உட்கொள்ளல் மிகவும் முக்கியமானது. 40 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் புரதம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.

கோழி மற்றும் மீன், பருப்பு வகைகள், பீன்ஸ், டோஃபு, காளான் மற்றும் சோயா போன்றவை புரதத்தின் சில நல்ல ஆதாரங்கள் ஆகும்.

நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள்

அனைத்து வயதினரும் துரித உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றாலும், 40 வயதிற்குப் பிறகு உடலின் வளர்சிதை மாற்றம் மெதுவாகத் தொடங்கும் போது, ​​ பதப்படுத்தப்பட்ட மற்றும் நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதைக் குறைக்கவும்.

நீங்கள் குறைவான ஜங்க் உணவை உட்கொள்ளும் போது, ​​உங்கள் உடல் கொழுப்பை சேமித்து வைப்பதை நிறுத்தி, வீக்கம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும், மேலும் செல்கள் அவற்றின் செயல்பாடுகளைச் செய்ய உதவும்.

வெந்தயம்

40 வயதிற்குப் பிறகு உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு அதிசய மூலப்பொருள் இருந்தால், அது வெந்தயமாகும். வெந்தய சாறு’ உடலில் கொழுப்பு திசுக்களைக் குறைப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் செரிமான நொதிகள், இரத்த குளுக்கோஸ் அளவுகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.

நீங்கள் வெந்தய விதைகளை கறி அல்லது டிடாக்ஸ் தண்ணீரில் சேர்க்கலாம். விரைவில் நீங்கள் சிறந்த முடிவுகளை கவனிப்பீர்கள், என்று கவுல் கூறினார்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை பொதுவாக கேக் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. ஆனால் இந்த மசாலா ஒரு இயற்கையான எடை இழப்பு முகவர் ஆகும், இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகிறது.

இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இலவங்கப்பட்டையைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி இலங்கை இலவங்கப்பட்டையை வாங்கி, நசுக்கி, சேமித்து வைப்பதாகும். இந்த பொடியை உங்கள் டீ, சூப் மற்றும் சாலட்களில் பயன்படுத்தவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Women health tips in tamil nutritionist shares best foods for women over 40 years