ஒரு பெண்ணின் வாழ்வில் மாதா மாதம் ஏற்படும் மாதவிடாய் நின்றுபோகும் நிலையே மெனோபால். இது ஒரு வியாதியல்ல. உடலில் நிகழும் மிகவும் இயற்கையான ஒரு நிகழ்வு. வயதாகும் போது, பெண்களின் சினைப்பையில் உள்ள கருமுட்டை தீர்ந்துவிடும். இதனால் மாதவிடாய் ஏற்படுவதும் நின்றுவிடுகிறது. இதுதான் மெனோபாஸ். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மாறுபடும்.
45 வயதிலிருந்து 54 வயது வரை எப்போது வேண்டுமானால் மெனோபாஸ் வரலாம்.
இந்த மெனோபாஸ்’ மாதவிடாய் வலிகள் மற்றும் ஒவ்வொரு மாதமும் தேவைப்படும் கூடுதல் கவனிப்பு போன்றவற்றில் இருந்து சில பேருக்கு சுதந்திரத்தை கொடுத்தாலும் பலருக்கு தூக்கமின்மை, மனநிலை மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற தொல்லையையும் தருகிறது.
சில சந்தர்ப்பங்களில், மாதவிடாய் நிறுத்தம் பெண்களின் எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் ஃபவுண்டேஷன் சேகரித்த புள்ளிவிவரங்கள், 60 வயதிற்கு மேற்பட்ட மூன்று பெண்களில் ஒருவருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக குறைந்தது ஒரு எலும்பு முறிவாது ஏற்படுவதைக் காட்டுகிறது.
பெரி-மெனோபாஸ் காலத்தில், பெண்களின் உடல்கள் வித்தியாசமாக செயல்படத் தொடங்கும். அவர்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக மாறுகிறார்கள், மேலும் மாதவிடாய் நின்ற பிறகு அவர்களுக்கு ஆர்த்ரைடிஸ், மூட்டுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும்.
மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவதே இதற்கு காரணம். பெண்களின் கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன், அவளது எலும்பு ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு பெண்ணின் உடல் 25 முதல் 30 வயதிற்குள் அதன் உச்ச எலும்பு நிறையை அடையும். இதன் பொருள் அவளது எலும்பு வளர்வதை நிறுத்துகிறது. இந்த நேரத்தில் அது தடிமனாகவும், வலுவாகவும் இருக்கும்.
ஒரு பெண்ணின் உச்ச எலும்பு ஆரோக்கியம் சிறந்ததாகக் கருதப்படுவதை விடக் குறைவாக இருந்தால், அவளுக்கு எலும்பு பலவீனம் – ஆஸ்டியோபீனியா அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் – மற்றும் பிற்காலத்தில் அது தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்த நிலைகளில் 20 சதவீதம் வரை எலும்பு இழப்பு ஏற்படலாம் என்றும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 10ல் ஒருவர் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எலும்புகள் உடையக்கூடியதாகவும் பலவீனமாகவும் மாறும், இது எலும்பு முறிவு, எலும்பு மற்றும் தசை வலி ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ’மெனோபாஸ் ஆர்த்ரைடிஸ்’ உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜனின் வளர்சிதை மாற்றத்திற்கு எதிர்வினையாற்றும் அசாதாரண மரபணுக்கள் மூலம் ஏற்படலாம், இதனால் எலும்பு அடர்த்தியின் அளவு குறைவதால் முழங்கால்கள், தோள்கள், கழுத்து, முழங்கைகள் மற்றும் உடலின் பிற மூட்டுகளில் மூட்டு வலி ஏற்படலாம்.
மாதவிடாய் நின்ற பின், முதன்மை ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இது எலும்பில் உள்ள அடர்த்தியை குறைத்து வெற்றுத்தன்மையை அதிகரிக்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் எலும்புகளின் அதிகரித்த பலவீனத்தை ஏற்படுத்துகிறது மற்றும் எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும், இது ” fragility fractures” என்று அழைக்கப்படுகிறது. இடுப்பு, மணிக்கட்டு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் இது பொதுவானது.
பெரி-மெனோபாஸ் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய தசைச் சிதைவு (sarcopenia) ஆகியவை’ பாதிக்கப்பட்ட நபரின் அன்றாட வாழ்வில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம், இது அடிப்படை இயக்கங்களில் இடையூறு, நிலையான உடல் வலி மற்றும் காயங்களுக்கு எளிதில் வழிவகுக்கும்.
பெரி-மெனோபாஸ் ஆஸ்டியோபோரோசிஸை முன்கூட்டியே கண்டறிந்து, சிக்கல்களைத் தடுப்பதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். நிலைமையை நிர்வகிப்பதற்கு குறைந்த விலை மருந்துகள் உள்ளன. எலும்புகள்’ தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை இழக்கத் தொடங்குவதால், ஒரு நல்ல தினசரி உணவை பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. தினசரி உணவில் குறைந்தது 1300 மி.கி கால்சியம் இருக்க வேண்டும். பல்வேறு பால் பொருட்கள், சோயா, பாதாம், டோஃபு, பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் இறைச்சிகளை உட்கொள்வதன் மூலம் இதை அடையலாம்.
கால்சியம் உட்கொள்ளல் மற்றும் உடலின் உறிஞ்சும் திறன் ஆகியவற்றுடன் இணைந்து, நல்ல வைட்டமின் டி அளவை பராமரிப்பது நல்ல எலும்பு ஆரோக்கியத்தை அடைய உதவுகிறது. அவ்வாறு செய்வதற்கான எளிதான வழி, தினமும் அதிகாலை சூரிய ஒளியில் வெளிப்பாடு மற்றும் சப்ளிமெண்ட்ஸை எடுத்துக் கொள்வதாகும்.
உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். வலுவான எலும்புகள் மற்றும் தசைகளைப் பெற வழக்கமான எதிர்ப்பு பயிற்சி (Regular resistance training) மிகவும் பயனுள்ள வழியாகும்.
மது அருந்துவதைக் குறைத்தல், புகைபிடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் அதிகப்படியான காஃபின் உட்கொள்ளலைக் குறைப்பது ஆகியவை எலும்பு நோய் அபாயத்தைத் தவிர்ப்பதற்கான சில பழக்கவழக்கங்கள்.
மாதவிடாய் நின்ற பிறகு, பிரச்சனையில்லாத வாழ்க்கைக்கு பெண்கள் பின்பற்றக்கூடிய தினசரி வாழ்க்கை முறை மாற்றங்கள் இவை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“