உடற்பயிற்சிகள், உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள், பிரத்தியேக உடல் பாகங்களில் கவனம் செலுத்துகின்றன அல்லது சில வலிகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. எனவே, உங்கள் இடுப்புத் தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளை நீங்கள் தேடுகிறீர்களானால் - நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்.
இந்த தசைகள் சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய், யோனி, கருப்பை, பெருங்குடல், மலக்குடல் மற்றும் ஆசனவாய் ஆகியவற்றை ஆதரிக்கின்றன. மேலும் சிறுநீர் கழித்தல் உட்பட பல்வேறு அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன.
பலவீனமான இடுப்புத் தசை அறிகுறிகள் என்ன?
இருமல், தும்மலின் போது சிறுநீர் கசிவு, கீழ் முதுகு வலி மற்றும் உடலுறவின் போது வலி ஆகியன பலவீனமான இடுப்பு தசைகளின் சில அறிகுறிகள்.
கர்ப்பம், பிரசவம், உடல் பருமன் அல்லது வயதாவதால் உங்கள் இடுப்பு தசைகள் பலவீனமடையலாம். பலவீனமான இடுப்பு உங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது, மேலும் தீவிர பலவீனம் தீவிர மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் மருத்துவர் நிதி ஷர்மா.
இவை மிக முக்கியமான தசைகளில் ஒன்றாகும், எனவே அவற்றை வலுப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம் என்று கூறும் நிதி, உங்களுக்கு உதவக்கூடிய சில Kegel பயிற்சிகளை வீடியோவில் செய்து காட்டினார்.
நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்தன்மையும் வலிமையும் முக்கியமானது, ஏனெனில் இந்த தசைகள் மேல் மற்றும் கீழ் மூட்டுகளுக்கு இடையில் சக்திகளை விநியோகிக்கின்றன மற்றும் கடத்துகின்றன என்று நொய்டாவின் தி பாடி சயின்ஸ் அகாடமியின் இணை நிறுவனர் வருண் ரத்தன் இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
எனவே வீடியோவில் மருத்துவர் நிதி ஷர்மா செய்து காட்டிய, Hip Adductors, Pelvic tilt, Bridges, Leg raises, Reverse Plank, Bird Dog ஆகிய உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள். ஒரு செட்டுக்கு 3-4 என 15-20 முறை திரும்ப செய்யவும்.
உங்களுக்கு இதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், இந்த வீடியோவை டவுன்லோட் செய்து இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்வதை உறுதி செய்யவும்.
மேலும், இதே போன்ற பிரச்சனைகள் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“