/indian-express-tamil/media/media_files/2025/08/30/wmremove-transformed-8-2025-08-30-14-35-26.jpeg)
Devi Krupa
ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை சில நொடிகளில் அதிகரிக்கும் மந்திர சக்தி லிப்ஸ்டிக்குக்கு உண்டு. அது வெறும் உதடுகளுக்கு வண்ணம் பூசுவது மட்டுமல்ல, ஒருவரின் ஆளுமையையும், ஸ்டைலையும் வெளிப்படுத்தும் ஒரு கலை. ஃபேஷன் உலகில், லிப்ஸ்டிக்கின் நிறங்களும் வகைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
இந்த வீடியோவில் பிரபல சீரியல் நடிகை தேவி கிருபா லிப்ஸ்டிக் மீதான தனது காதல் குறித்து மனம் திறந்து பேசினார்.
ஆனந்தம் சீரியல் பண்ணும் போது வாங்குன லிப்ஸ்டிக் என்கிட்ட இன்னும் இருக்கு. லிப்ஸ்டிக் கெட்டுப் போச்சானு ஸ்மெல் வச்சு கண்டுபிடிச்சுரலாம். அந்த லிப்ஸ்டிக் ஸ்மெல் இன்னும் நல்லா இருக்கு” என்று தேவி கிருபா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
பெரும்பாலானோர் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கும்போது தங்கள் சரும நிறத்தையே முதன்மையாகக் கருதுகிறார்கள். "நான் மாநிறமாக இருக்கிறேன், எனக்கு இந்த நிறம் பொருந்தும்", "நான் சிவப்பாக இருக்கிறேன், எனக்கு இது நன்றாக இருக்கும்" என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் லிப்ஸ்டிக் தேர்வு என்பது உங்கள் சரும நிறத்தை விட, உங்கள் உதடுகளின் அளவு மற்றும் பற்களின் அமைப்பைப் பொறுத்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மேக்கப் ஆர்டிஸ்ட் சந்தோஷி தனது அனுபவத்தைப் பகிர்கிறார்: ’சில பேருக்கு லிப்ஸ் சின்னதா இருக்கும். ஆனா ஸ்மைல் பண்ணதுக்கு அப்புறம் டீத் பெருசா இருக்கும். சோ நான் டார்க் லிப்ஸ்டிக் போட்டு ஸ்மைல் பண்ணேன்னா அப்ப எங்க போகும் ஃபோக்கஸ்? பிக்சர்ஸ் பார்க்கும்போது என் பிரைடு பெரிய பெரிய டீத் தெரியும். சில பேருக்கு பல்லு தூக்கலா இருக்கும். அவங்க டார்க் லிப்ஸ்டிக் போட்டா என்ன ஆகும்? அவங்களுடைய மைனஸ் இன்னும் தெளிவா தெரியும்.
எனவே, சரியான லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் சரும நிறம், உதடுகளின் வடிவம், பற்களின் அமைப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்யுங்கள். இது உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்த உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.