மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு உள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
மனநல பிரச்சனைகள் குறிப்பாக சிசோபெர்னியா ( schizophrenia), பைப் போலார் குறையாடு (bipolar disorder), மேஜர் டிப்ரசிவ் குறைபாடு ( major depressive disorder) உள்ளிட்ட மனநல பிரச்சனைகள் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பபை வாய் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் 2 மடங்கு அதிகம் என்று ஆய்வுகள் கூறுகிறது.
பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்று கர்ப்பபை வாய் புற்றுநோய். இந்நிலையில் இதை முன்கூட்டியே சோதனை செய்து கண்டுபிடித்துவிட்டால், இந்த நோய் தாக்கத்தை குறைத்துவிட முடியும்.
இந்நிலையில் 1940 முதல் 1995 வரை உள்ள ஆண்டுகளில் பிறந்த 4 லட்சம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
குறிப்பாக மனநல பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கர்ப்பபை வாய் புற்று நோய் வருவதற்கான அறிகுறிகள் முன்பே இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற பெண்களிவிட இவர்களுக்குதான் 2 மடகு கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அதிக நாட்களாக கூடுதல் மருந்துகள், அதாவது மருத்துவர் பரிந்துரை செய்த அளவுக்கு அதிகமாக மருந்துகள், மதுபானம் எடுத்துகொள்ளும் பெண்களுக்கு கர்ப்பபை வாய் புற்று நோய் ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இன்னும் அதிகம் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக மனநல பிரச்சனைகள் இருக்கும் பெண்கள் அடிக்கடி இந்த புற்றுநோய் இருக்கிறதா ? என்று மருத்துவரிடம் சென்று பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
இந்த ஆய்வில் புகைபிடிப்பதால் மற்றும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்று கூறவில்லை.
இந்நிலையில் 2020ம் ஆண்டு மே மாதம் , உலக சுகாதார நிறுவனம் கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்க சில வழிமுறைகளை வெளியிட்டது. 35 வயதிற்குள் இருப்பவர்கள் கர்ப்பபை வாய் புற்றுநோய் தொடர்பான பரிசோதனையை ஒரு முறையாவது செய்திருக்க வேண்டும். 35 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் 2 முறை பரிசோதனை செய்திருக்க வேண்டும்.