நீங்கள் கொளுத்தும் கோடையின் ரசிகராக இருந்தாலும் அல்லது குளிர்ந்த குளிர்காலத்தை விரும்புபவராக இருந்தாலும், ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியான வார்டிரோப் தேவை.
வசதியான கம்பளி ஸ்வெட்டர்கள் முதல் ஸ்டைலான சால்வைகள், ஸ்னக் சாக்ஸ் வரை, குளிர்காலத்தில் குறிப்பிட்ட ஆடை தேர்வுகள் தேவை.
நம் கம்பளி ஆடைகளின் ஆயுட்காலம் நீட்டிக்க அவற்றை சரியாக கவனித்துக்கொள்வது முக்கியம். உங்கள் ஆடைகள் பல ஆண்டுகளாக உகந்த நிலையில் இருப்பதை இது உறுதி செய்யும்.
புது தில்லியின் தேசிய ஃபேஷன் டெக்னாலஜியின் (NIFT) RTC திட்டத்தின் ஜவுளி ஆராய்ச்சியாளரும் கண்டெண்ட் மேனஜரும் ஆன டாக்டர் திவ்யா சிங்கால், அதை எப்படிச் செய்யலாம் என்பது குறித்த சில சூப்பர் சிம்பிள் டிப்ஸ்களை வழங்கினார்.
கம்பளி, வெப்பம் மற்றும் நீரின் தாக்கத்தால் சுருங்கும் ஒரு உள்ளார்ந்த பண்பைக் கொண்டுள்ளது. இதனால் சலவை மற்றும் சேமிப்பின் போது கம்பளி துணிகளுக்கு சிறப்பு கவனிப்பு தேவை.
கம்பளி ஆடைகளின் பராமரிப்பு
டாக்டர் சிங்கால் பகிர்ந்துள்ளபடி, உங்கள் கம்பளி ஆடைகளை நீண்ட காலத்திற்கு புதியதாக வைத்திருக்க சில குறிப்புகள் உள்ளன.
/indian-express-tamil/media/media_files/rPKBCwc3YbowFsE58Jl9.jpg)
1. Non-ionic டிடெர்ஜெண்டில் உங்கள் கம்பளி துணிகளை, கையால் துவைக்கவும் அல்லது மினிமம் ஸ்பின் சைக்கிள் உடன், வாஷிங் மெஷினில் மைல்ட் செட்டிங்கை பயன்படுத்தவும்.
2. துவைப்பதற்கு குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்.
3. உங்கள் கம்பளி ஆடைகள் ஈரமாக இருக்கும்போதே அவற்றை நன்கு விரித்து காயப்போடவும்.
4. அவற்றை லைன்-ட்ரை செய்ய வேண்டாம். பேடட் ஹேங்கர்களைப் பயன்படுத்தி அவற்றைத் தொங்கவிடவும் அல்லது முடிந்தால், நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி தட்டையாக வைக்கவும்.
முடிந்தால் அவற்றை ஃபிளெட்டாக மடித்து வைக்கவும், நேரடி சூரிய ஒளியில் வைக்கக் கூடாது.
5. ஒரு கறை இருந்தால், அதை துவைப்பதற்கு முன் சரி செய்ய வேண்டும்.
6. ஸ்டீம் பிரெஸ் அல்லது ஆடைகள் ஈரமாக இருக்கும் போது அயர்னிங் செய்ய வேண்டும். இது மடிப்புகள் மற்றும் சுருக்கங்களை மிகவும் திறம்பட அகற்ற உதவுகிறது.
7. கம்பளி, அந்துப்பூச்சி தாக்குதலுக்கு ஆளாகிறது, எனவே, அவற்றை கவனித்துக்கொள்வது அவசியம். உங்கள் கம்பளி ஆடையை சேமிக்கும் போது, ஆடை முற்றிலும் உலர்ந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பேக்கிங் செய்வதற்கு முன், பிரகாசமான சூரிய ஒளியில் அவற்றை காற்றோட்டம் செய்வது ஒரு நல்ல நடைமுறை.
8. பருத்திப் பைகள் அல்லது பிளாஸ்டிக் பைகளில் அந்துப்பூச்சி விரட்டும் உருண்டைகள் அல்லது உலர்ந்த வேப்ப இலைகளைக் கொண்டு பேக் செய்யவும். உங்கள் ஆடைகளுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்க இந்த பொருட்களை ஒரு சிறிய காட்டன் பையில் சுற்ற வேண்டும்.
9. சேமிக்கும் இடம் டிரையாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் ஆடைகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க கூர்மையான விளிம்புகள் இருக்கக்கூடாது.
Read in English: Take care of your woollen clothes with these simple tips
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“