work stress, emotional quotient, emotional intelligence, indian express, indian express news
கொரோனா தொற்று இருக்கிறதோ இல்லையோ வேலை பளு என்பது எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை எப்படி எதிர்கொள்வது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஒருபுறம் பெரும் அளவுக்கு நிச்சயமற்ற தன்மை காரணமாக அழுத்தம் அதிகரித்திருக்கிறது. இன்னொருபுறம், வேலைகள் வழக்கம்போல நடக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்பது போன்ற வேலைகள் தொடர்பான கடமைகள் இருக்கின்றன. மன அழுத்த நேரத்தைக் கடந்து செல்ல ஒரு ஆரோக்கியமான உணர்ச்சி மேலாண்மை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக சரியானதாக இருக்கும்.
Advertisment
Advertisements
அவர்களை வெல்ல முடியாதது மட்டுமல்ல, உணர்ச்சிகளை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவர், மற்றவர்களை காட்டிலும் சில விளிம்புகளைக் கொண்டிருப்பர்.
சூழ்நிலைகளின்போது அவர்களில் பெரும்பாலானோர் பதில் அளிப்பார்கள். ஆனால், எதிர்வினையாற்றமாட்டார்கள். சில நேரங்களில் நமது உணர்வுகளால் நாம் உந்தப்படுகின்றோம். சூழ்நிலைகளின்போது இப்படிநாம் எதிர்வினையாற்றினால், அது உத்தரவாதமானதாக இருக்காது. உணர்வு முதிர்ச்சியின் உன்னதமான அறிகுறிகளில் ஒன்று, ஒரு நபர் சமநிலை உணர்வுக்கு வருவதற்கு நேரம் எடுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. அதன்பின்னர், தர்க்கரீதியாகவும், நியாயமானதாகவும் பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
எது அவர்களை நன்றாக வேலை செய்யத்தூண்டுகிறது `எது வேலை செய்ய தூண்டவில்லை என்பதை அவர்கள் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தூண்டுதல் புள்ளி இருக்கிறது. இது எதிர்மறையான பதிலை வெளிப்படுத்துவதாக இருக்கும். அது கடினமான சக நபராகவோ , சாத்தியமில்லாத காலக்கெடுவாகவோ அல்லது ஏதோ ஒரு காரணமாகவோ இருக்கலாம். விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம், அதனை சுற்றி பணியாற்றும் வழிகளை நீங்கள் கண்டறிய வாய்ப்புள்ளது.
நீங்கள் இப்போது பணியாற்றிக் கொண்டிருந்தால், ஒரு உணர்வு மேலாண்மை கொண்ட நபரை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை நம்புகின்றவர்களை அவர்கள் எப்போதுமே தொடர்ந்து இருப்பார்கள். அவர்களின் உணர்வுகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். இது ஆரோக்கியமானது என்று கருதப்படுகிறது. அவர்கள் திறந்த மனதுடன் சாதகமான வினையாற்றக்கூடியவர்களாக, இதர மக்களின் கருத்துகளை கேட்பவர்களாக இருக்கின்றனர் என்ற ஈர்ப்பைக் கொடுக்கும்.
ஒரு சூழ்நிலையில் குறிப்பாக அவர்கள் அதில் ஈடுபாடு கொண்டிருந்தால், எப்போதுமே அவர்கள் மூன்றாவது நபரின் கண்ணோட்டதைக் கொண்டிருப்பார்கள். இது, அவர்களின் சொந்த பழக்க வழக்கங்களை மதிப்பீடு செய்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் நல்லமுறையில் செயல்படவும் உதவும். ஒரு முடிவுக்கு வரும்முன்பு, யாரோ ஒருவரின் கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்வது ஒரு சிறந்த வழியாகும்.
உணர்வு மேலாண்மை என்பது, உங்களை நெகிழ்வு தன்மை கொண்டவராக மாற்றும். இது ஒரு முடிவற்ற செயல்பாடாகும். உங்களுக்கு நீங்களே தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, உங்களை அழுத்துவது எது என்பதை கண்டுபிடியுங்கள். உங்களுடைய உடல் மற்றும் உணர்வு நலன்கள் மூலம் அதில் பணிபுரியுங்கள்.
ஒரே நாள் இரவில் நீங்கள் மாறிவிடமுடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு முழுமையான நல்வாழ்வுக்காக எண்ணங்களுக்கு ஏற்ப எதிர்வினையாற்றும் வழியிலும், அதனை அணுகும் முறையிலும் நுட்பமான மாற்றங்களை நீங்கள் செய்யமுடியும். கொரோனா தொற்று இருக்கிறதோ இல்லையோ வேலை பளு என்பது எப்போதுமே இருந்து கொண்டே இருக்கிறது. அதனை எப்படி எதிர்கொள்வது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil