உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், பணி/தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்துக்கொள்வது முக்கியம். அப்போதுதான் இரண்டையும் சமமாக கொண்டு செல்ல முடியும்.
பணியினால் ஏற்படும் மனஅழுத்தத்தை வீட்டிற்கு கொண்டு வருவதற்கு யாருமே விரும்பமாட்டார்கள். ஆனால், சில நேரங்களில், மக்கள் தங்கள் பணி தொடர்பான மனஅழுத்தத்தை வீட்டில் வந்து கொட்டிவிடுகிறார்கள். இது திடீரென ஒருவரின் தனிப்பட்ட உறவுகளை பாதித்துவிடும். முக்கியமாக ஒருவரின் காதல் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். மனஅழுத்தத்துடன் பணிசெய்யும் ஒவ்வொரு பணியாளருக்கு பின்னாலும், ஒரு குழப்பமான இணையர் இருப்பார். அவருக்கு, அந்த கடுமையான சூழலை தாங்கி வாழ என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாது. வேலைப்பளு கொடுக்கும் மன அழுத்தத்தில் இருந்து, நீங்கள் வீட்டின் மகிழ்ச்சியான சூழலுக்கு செல்லலாம் என்று நினைப்பீர்கள். ஆனால், அந்த வேலைப்பளு கொடுக்கும் மன அழுத்தம் வீட்டிலும் தொடரும். அங்கு ஆரோக்கியமான உறவை பேணுவதற்கு கடினமாக இருக்கும். அது உங்கள் மனநிலையை பாதிக்கும். இதோ இங்கு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
எந்த வேலையையும் செய்வதற்கு சக்தி இருக்காது
ஒரு நாளின் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, நீங்கள் திரும்பி வரும்போது நினைத்துப்பார்க்க முடியாத அளவு சோர்வை உணர்வீர்கள். எனவே அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு சக்தியளிக்கும் வகையிலுமே நாம் ஏதாவது செய்தால், அவர்கள் அடுத்த வேலை செய்ய முடியும். நீங்கள் ஏதாவது திட்டமிட்டு இருப்பீர்கள். ஆனால், அதில் உற்சாகமாக கலந்துகொள்வதற்கு உங்கள் இணையர் தயங்குவார். அவரால் வேலை, அது கொடுத்த மனஅழுத்தத்தில் இருந்து வெளிவர முடியாது. இது உங்களுக்கும், உங்கள் இணையருக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தலாம்.
ஆளுமை நெருக்கடி
இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை. உங்களின் தனித்தன்மை அதாவது குணநலன்களையும் பாதிக்கிறது. உங்கள் இணையர் உங்களை எரிச்சலடையக்கூடிய நபராகவும், யாரிடமும் மனம்விட்டு பேசாத நபராகவும் பார்க்க துவங்குகிறார். உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்கள் கூட நீங்கள் இருப்பதை விரும்பாமல் இருப்பார்கள். உங்கள் மனநிலை மற்றும் உணர்வுகள் உங்களை எவ்வித ஒட்டுதலும் இன்றி தனிமையில் தள்ளும். அது மேலும் பல கடுமையான வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும்.
உறவில் தடை
உங்கள் மனநிலை, உங்கள் இணையரிடம் வெளிப்படையாக பேசுவதை தடுக்கும். ஆனால் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பது தவறாகும். எனவே அவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். உங்களுக்கு உள்ள பிரச்னைகள், அவை ஏற்படுத்தும் மனஅழுத்தம் ஆகியவற்றை அவர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம். உங்கள் உணர்வுகளை அடக்கி வைத்துக்கொள்வதைவிட, அவர்களிடம் நீங்கள் மனம்திறந்து பேசிவிடவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் உங்களுக்கு பிரச்களை கையாள்வதற்கும், அதிலிருந்து வெளியேறுவதற்கும் சிறிது அவகாசம் தேவைப்படும். அதற்கு உங்களுக்கு ஒரு இடைவெளி முக்கியம். அதை நீங்கள் அவர்களுக்கு தெளிவுப்படுத்தினால் மட்டுமே அவர்களால் புரிந்துகொள்ள முடியும். எனவே அவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள்.
தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்வது
வேலை தொடர்பான மன அழுத்தம் மற்றும் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை யாரிடமும் கூறாமல் இருப்பது, உங்களை சுருக்கிக்கொள்வதற்கும், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்வதற்கும் வழிவகுக்கும். எனவே உங்களுக்கு நெருக்கமானவர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களின் உதவியையும், ஆதரவையும் பெறுவது மிகமிக அவசியமாகும். அது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், பணி/தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்துக்கொள்வது முக்கியம். அப்போதுதான் இரண்டையும் சமமாக கொண்டு செல்ல முடியும். இந்த பிரச்னைகள் உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்னைகளை உருவாக்கும் என்ற எண்ணம் இருந்தால், உடனடியாக, கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனைக்கு செல்லவும். ஒரு மனநல நிபுணர் உங்கள் சூழ்நிலைகளை நன்றாக புரிந்துகொண்டு, உங்களுக்கு வழிகாட்ட முடியும்.
தமிழில்: R.பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil