Advertisment

அதிகரித்த வேலையால் மன அழுத்தம்: புனே ஊழியர் மரணம்- இதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?

Workplace stress- மன அழுத்தம் என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும் போது, அதை அளவிடுவதற்கான ஒரே வழி, உடல் அதற்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் படிப்பதுதான்.

author-image
WebDesk
New Update
workplace stress

What Pune EY employee’s death tells us about workplace stress: Can it be measured? What are early warnings?

எர்ன்ஸ்ட் அண்ட் யங்கில் 26 வயதான சாட்டர்ட் அக்கவுண்டட் மரணம், மனித ஆரோக்கியத்தில் டாக்சிக் வேலை கலாச்சாரத்தின் தாக்கம் குறித்து புயலை எழுப்பியுள்ளது. பெரிய கேள்வி என்னவென்றால், மன அழுத்தத்தை நாம் எப்போதாவது அளவிட முடியுமா?

Advertisment

பணிச்சுமை, புதிய சூழல் மற்றும் நீண்ட வேலை நேரம், ஆகிய காரணங்களால் என் மகள் நிறுவனத்தில் சேர்ந்த நான்கு மாதங்களில் இறந்ததாக’, அந்த பெண்ணின் தாய் எர்ன்ஸ்ட் அண்ட் யங்கின் இந்தியத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மன அழுத்தம் என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும் போது, ​​​​அதை அளவிடுவதற்கான ஒரே வழி, உடல் அதற்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் படிப்பதுதான். அதனால்தான் இதயத் துடிப்பு மாறுபாடு, (லக்ட்ரோஎன்செபலோகிராபி (EEG) மூலம் மூளை அலைகளைப் படிப்பது மற்றும் ரத்தப் பரிசோதனையின் மூலம் அதிக கார்டிசோல் அளவைப் பரிசோதிப்பது ஆகியவை சுகாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், எந்தப் பரிசோதனையாலும் அதை அளவிட முடியாது.

எனவே உடல் வெளிப்பாடுகள் அல்லது மன அழுத்தத்திற்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பதை கவனிப்பது நல்லது, என்கிறார் டாக்டர் ஷௌனக் அஜிங்க்யா (consultant psychiatrist, Kokilaben Dhirubhai Ambani Hospital, Mumbai)

மன அழுத்தம் அதிகரிப்பதைக் குறிக்கும் உடல் அறிகுறிகள்

அடிக்கடி தலைவலி, அதிக ஆசிடிட்டி, இரைப்பை தொந்தரவுகள், எரிச்சலூட்டும் குடல் இயக்கம், தசை பதற்றம், ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, மூட்டு வலி மற்றும் பிற வலிகள். தூங்குவதில் சிரமம், நள்ளிரவில் மீண்டும் மீண்டும் விழிப்பு, அதிகாலையில் எழுந்திருத்தல் அல்லது அதிக தூக்கம் போன்ற தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள்.

தொடர்ச்சியான சோர்வு, குறைந்த ஆற்றல் நிலைகள் மற்றும் பசியின்மை அல்லது எடையில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் நல்ல குறிகாட்டிகளாகும்.

எமோஷன் டிராக்கர்                                   

மனநிலை மாற்றங்கள் அல்லது மீண்டும் மீண்டும் எரிச்சல் உணர்வுகள் பொதுவானவை. சிலர் சிறிதளவு அழுத்தம் கூட தாங்க முடியாது, கவனம் செலுத்துவது அல்லது முடிவுகளை எடுப்பதில் சிரமம் இருக்கும். மற்றவர்களுக்கு கவலை அல்லது பீதி மற்றும் வரவிருக்கும் அழிவு போன்ற உணர்வுகள் இருக்கலாம். தன்னம்பிக்கை இன்மை, வேலையில் ஆர்வம் குறைதல், அன்றாட நடவடிக்கைகளை கூட கவனியுங்கள்.

பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள நடத்தை மாற்றங்கள்

பல மாற்றங்கள் ஒன்றாக உள்ளன, சிலர் அவற்றில் சிலவற்றை அனுபவிக்கலாம்

அதிக நேரம் வராதது அல்லது தாமதம்.

தள்ளிப்போடுதல் அல்லது வேலை செயல்திறன் குறைதல்.

வேலை மற்றும் வெளியில் சமூக தொடர்புகளிலிருந்து விலகுதல்.

workout

ஆல்கஹால், புகைபிடித்தல், போதைப்பொருள் அல்லது அதிகப்படியான உணவு போன்ற ஆரோக்கியமற்ற சமாளிக்கும் வழிமுறைகளை நம்பியிருத்தல்.

நீங்கள் ரசித்த பொழுதுபோக்குகள் அல்லது செயல்பாடுகளுக்கு நேரம் அல்லது ஆற்றல் இல்லாமை.

வேலை தொடர்பான மன அழுத்தத்தை வீட்டிற்கு கொண்டு வருதல், இது குடும்பம் மற்றும் ஓய்வு நேரத்தை பாதிக்கிறது.

சக ஊழியர்கள், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உங்கள் நல்வாழ்வைப் பற்றி கவலைப்படுவது.

உங்கள் நடத்தை அல்லது வேலையில் செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பற்றிய கருத்துக்கள்

மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது?

நாள்பட்ட மற்றும் நீடித்த மன அழுத்தம் இதய நோய், வகை 2 நீரிழிவு நோய், உயர்ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு அளவு ஆகியவற்றின் ஆரம்ப தொடக்கத்திற்கு வழிவகுக்கும். இது முடி உதிர்தல், முகப்பரு, ஒவ்வாமை, ஆஸ்துமா, தைராய்டு கோளாறுகள், மாதவிடாய் பிரச்சனைகள், தன்னுடல் எதிர்ப்பு நோய்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்றவற்றையும் மோசமாக்கும்.

நாள்பட்ட மற்றும் நீடித்த மன அழுத்தம் மனச்சோர்வு, உணவுக் கோளாறுகள் மற்றும் பாலியல் செயலிழப்பு போன்ற உளவியல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

இந்த அறிகுறிகளை அனுபவித்தால் உடனே அருகில் உள்ள மனநல மருத்துவரை தொடர்பு கொண்டு, ஆலோசனை பெறுவது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment