தாய் பாலின் மகத்துவத்தை கொண்டாடும் நாள் இன்று!

தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது தவறாகும்.

இன்று உலக தாய்ப்பால் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக மக்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று தொடங்கி 7ஆம் தேதி இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என்று பல்வேறு அமைப்பினர் நடத்தி, மக்களுக்கு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவார்கள்..

உலகில் கலப்படம் செய்ய முடியாத ஒரே உணவு, குழந்தைகளுக்கான தாய்ப்பால்தான் என்பதால், இந்த கலப்படமில்லாத விலை மதிப்பில்லாத தாய்ப்பாலை, புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் எக்காரணம் கொண்டும்,உங்களது குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள். தாய்ப்பால் கொடுக்காத தவிர்ப்பதன் மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையின் உணவு உரிமையைப் பறித்துவிடாதீர்கள்.

தாய்பால் கொடுப்பதால் ஏற்படும் பயன்கள்:

1. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கொடிய நோயான கேன்சர் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

2. தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளச்சிக்கு தேவையான கொழுப்பு, சக்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்றவை சரியான அளவில் கிடைக்கிறது.

3. தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளச்சிக்கு தேவையான கொழுப்பு, சக்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்றவை சரியான அளவில் கிடைக்கிறது.

4. வேலைக்குச் செல்லும் பெரும்பாலான குழந்தைகளுக்கு தாய்மார்கள் பசும் பாலை புட்டியில் நிரப்பி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இது மிகவும் தவறான செயலக கூறப்படுகிறது.

5. ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது தவறாகும்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: World breastfeeding week 2018 who international breastfeeding week

Next Story
அஜித் பட பாடலை வைத்து அட்வைஸ் சொன்ன முதல் பெண் பைலட் காவ்யா!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X