World Breastfeeding Week 2019: உலக தாய்ப்பால் வாரம் 2019: வாசகர்களே! தாய்ப்பால் கொடுக்க வேண்டியது தாய்தான், ஆனால் குழந்தையை கவனித்துக்கொள்வதில் உங்களின் பங்கு எதுவும் இல்லையென்று நினைக்க வேண்டாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு நிறைய ஆதரவும், கவனிப்பும் தேவைப்படுகிறது . அந்த ஆதரவையும் கவனிப்பையும் அந்த தாய்மார்களின் அருகாமையில் நீங்கள் இருக்கும்போதுதான் கிடைக்கும். அவர்கள் பாலூட்டும்போது அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவியின் போது தான் உங்கள் குழந்தைகள் பேசும் மொழியை உங்களால் உணர முடியும்.
தந்தைகள் அல்லது பார்ட்னர்ஸ்-கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதற்கான சில வழிமுறைகள் இங்கே.
1. முதலில் விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்:
முதலில் பாலூட்டுதலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவற்றின் தன்மைகள் என்ன,வழிமுறைகள் என்ன, அவற்றிற்கான சிக்கல்கள் என்ன என்பதற்கான உங்களது தேடல்களும்,அவற்றிற்கான பதில்களுமே அவளுக்கு பெரும் துனையாய் இருக்கும்.
உதவி செய்யுங்கள் : இயல்பு வாழ்க்கையில் பாலூட்டுவது மிகவும் சவாலான விஷயங்களாகும். பாலூட்டும்போது அவளது உடலும், மனமும் சோர்வடையும். சாய்ந்துக் கொள்ள தலையணையைத் தருவது, தண்ணீர் அல்ல அவளுக்கு தேவைப்படும் உணவை கொடுப்பது, அவள் புன்னகைக்கக்கூடிய வார்த்தைகளைப் பேசுவது, வீட்டில் செல்லப் பிராணிகள் மற்றும் உறவினர்கள் அந்நேரத்தில் அவளிடம் வராத வகையில் ஒரு காவலாய் நிற்பது, போன்றவைகள் அவர்களுக்கு பெரும் உதவியாய் இருக்கும்
பாலூட்டும் தாய்மார்களை ஊக்கப்படுத்துங்கள்:
ஆரம்ப நாட்களில் தாய்ப்பால் கொடுப்பது முதல் முறையாய்த் தாய்மையடையும் பெண்களுக்கு கடினமாகவே இருக்கும். பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் ஒத்துழைக்காது . நீங்கள் அந்நேரத்தில் பொறுமையை இழக்காதீர்கள், தாயை ஊக்குவியுங்கள். நீங்கள் பக்கத்திலிருப்பீர்கள் என்று உறுதியைக் கொடுங்கள் . அந்த சிறந்த தாய்ப்பாலைத் தொடர அவளுக்கு நம்பிக்கை கொடுங்கள்.
குழந்தை பராமரிப்பில் உதவுங்கள் : தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பும், பின்பும், உங்கள் குழந்தைகளின் டயப்பரை நிறைய முறை மாற்ற வேண்டியிருக்கும். அதை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம். தாய்ப்பால் கொடுத்த பிறகு, உங்கள் குழந்தையை நீங்கள் கவனமாக பற்றிக் கொள்ளுங்கள்.
பிறரிடம் பேசுங்கள் : தாய்ப்பால் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பதை உணர்ந்தால் லேக்டேஷன் ஆலோசகரைத் (lactation consultant) தொடர்பு கொள்ளுங்கள். முதலில், அவர்களின் தொடர்பு எண் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். மேலும்,தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான உங்கள் கவலைகளைப் பகிர்வதற்கும் ,ஆலோசனைகள் கொடுப்பதற்கும் நீங்கள் உள்ளூர் அல்லது ஆன்லைனில் தாய்ப்பால் கொடுக்கும் குழுக்களில் உறுப்பினராக சேரலாம்.
அன்பை பரிமாறுங்கள்: ஆரம்ப மாதங்களில் புதிய தாய்மார்களுக்கு மிகவும் மன அழுத்தம் ஏற்படுத்தும். எனவே, அவளுக்கு போதுமான அன்பையும் பாசத்தையும் காட்ட மறக்காதீர்கள். அவள் உறவு கொள்ள விரும்பவில்லை என்றால் பொறுமையாய் இருங்கள்.
சில மாதங்கள் கழித்து : ஓரிரு மாதங்கள் கழிந்து ,சேமித்து வாய்த்த தாய்ப்பாலை நீங்களே பாட்டிலுள் உங்கள் குழந்தைக்குக் கொடுக்கலாம்.
குழந்தைகளோடு இணக்கமாய் இருங்கள்: உங்கள் குழந்தையை உங்கள மார்போடு அணைக்கும் போதும் ஸ்லிங் கேரியர் போக்கில் தூக்கி சுமக்கும் போதும் உங்கள் குழந்தைக்கும் உங்களுக்குமான தொடர்பை நீங்கள் ஆழப்படுத்துவீர்கள்.