Advertisment

World Cancer Day 2022: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.. புற்றுநோயியல் நிபுணர் சொல்கிறார்!

40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து நபர்களும் வருடத்திற்கு ஒருமுறை புற்றுநோயியல் நிபுணரிடம் சென்று வருடாந்திர பரிசோதனை செய்ய வேண்டும்.

author-image
WebDesk
New Update
World Cancer Day 2022

World Cancer Day 2022: Oncologist shares important things you to know

உலக புற்றுநோய் தினமான இன்று, புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் நிதி கிருஷ்ணா ரைசாடா, கிட்டத்தட்ட 10 இந்தியர்களில் ஒருவர்’ தங்கள் வாழ்நாளில் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர், இது வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்கிறார்.

Advertisment

"புகையிலை-ஆல்கஹால், மன அழுத்தம், மோசமான உடல் செயல்பாடு மற்றும் உணவுமுறை உள்ளிட்ட வாழ்க்கைமுறை காரணிகள் புற்றுநோய்க்கு பங்களிக்கின்றன. மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை நம் சமூகத்தில் மிகவும் பொதுவான புற்றுநோய்களாகும்.

இதில்’ பெரும்பாலானவை புற்றுநோய்க்கு முந்தைய நிலைகளைக் கொண்டுள்ளன, எனவே’ இவை அனைத்தும் எளிய சோதனைகள் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு தடுக்கப்படலாம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஸ்கிரீனிங் ப்ரோகிராம்’ மிகவும் மதிப்பு வாய்ந்தவை, 40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து நபர்களும் வருடத்திற்கு ஒருமுறை புற்றுநோயியல் நிபுணரை சந்தித்து வருடாந்திர பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் கூறுகிறார். "இதில் இரத்த விவரம் மற்றும் பாலினம் சார்ந்த /அல்லது ஆபத்து சார்ந்த சோதனைகள் (gender-specific and/or risk-specific tests) அடங்கும்."

"ஏதேனும் சந்தேகத்திற்கிடமான புண்கள் இருந்தால், ஒரு புற்றுநோயியல் நிபுணர் ஊசி பரிசோதனை அல்லது பயாப்ஸியைத் (biopsy) தேர்ந்தெடுப்பார். பயாப்ஸி’ புற்றுநோயை உறுதிசெய்தால், சில பயோ-மார்க்கர்ஸ் (biomarkers) சிகிச்சையைத் தீர்மானிக்கின்றன; அதனுடன், புற்றுநோயை நிலைநிறுத்த சில ஸ்கேன்களையும் செய்யலாம்.

“ரேடியேஷன் சிகிச்சை, அறுவை சிகிச்சை, சிஸ்டமிக் சிகிச்சை, கீமோதெரபி, பயாலஜிக் சிகிச்சை அல்லது நோயெதிர்ப்பு சிகிச்சைகள் அல்லது மாற்று சிகிச்சை போன்ற வடிவங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இப்போது பெரும்பாலான சிகிச்சையானது குறிப்பிட்ட கட்டி மற்றும் நோயாளியின் குணாதிசயங்களின் அடிப்படையில் கஸ்டமைஸ் ஆக்கப்பட்டுள்ளது. அறுவை-சிகிச்சைகள் உடல் உறுப்புகளைப் பாதுகாப்பதாக மாறி வருகின்றன. ரேடியேஷன் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சிஸ்டமிக் சிகிச்சையானது’ சில மூலக்கூறு குறிப்பான்களின் வெளிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.

publive-image

உலக புற்றுநோய் தினம் 2022

இதை எப்படி செய்ய முடியும்?

1. ஸ்கிரீனிங் மற்றும் தடுப்புத் திட்டங்களுக்காக’ சில போதை பழக்கங்கள், தொழில்கள், குடும்ப வரலாறு போன்ற அதிக ஆபத்துள்ள குழுக்களை அடையாளம் காணவும்.  இந்த ஆபத்து குழுக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.

ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் மோசமான சமூக ஆதரவு அல்லது பொருளாதார காரணங்களால் சிகிச்சை பெறாத நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களை கண்கானிக்க முழுமையான அணுகுமுறையை எடுக்க வேண்டும்.

நோயாளி வசிக்கும் பகுதியில் போதுமான வசதிகள் இல்லாமல் இருக்கலாம். தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஒரு பராமரிப்பு வசதியை உருவாக்குவது, மேலும் அதிகமான மக்கள்தொகைக்கு தீர்வு காண முடியும்.

நோயாளிகள் தங்கள் நிலையைப் பற்றி போதுமான புரிதல் இல்லாமல் இருக்கலாம். இதற்கு பராமரிப்பாளர் மற்றும் சுகாதார வழங்குநரின் தரப்பில் சிறந்த தகவல் தொடர்பு தேவை, மேலும் இந்த சிக்கல்களைத் தீர்க்க அதிக ஒருங்கிணைப்பாளர்கள் பணியாற்ற வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment