பத்து இந்தியர்களில் ஒருவருக்கு அவர்களுடைய வாழ்நாளில் புற்றுநோய் வரும் என்றும் 15 இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் இறப்பார் என்றும் உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம் மற்றும் (WHO) இந்த நிகழ்வில் இரண்டு உலகளாவிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 1.35 பில்லியன் மக்கள்தொகையில் 1.16 மில்லியன் புதிய புற்றுநோய் நோயாளிகள் என்றும், 7,84,800 புற்று நோயால் உயிரிழப்புகள் எற்பட்டுள்ளன என்றும் ஐந்து ஆண்டுகளில் 2.26 மில்லியன் இறப்புகள் ஏற்ற்படுள்ளன என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு 2018-இல் இந்தியாவில் புற்றுநோய் பிரச்னைகள் என்று திங்கள் கிழமை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை, புற்றுநோய்க்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை அமைத்தல், பங்குதாரர்களை அணிதிரட்டுதல் மற்றும் புற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமைகளை அமைக்க நாடுகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அறிக்கையில், இந்தியாவில் பொதுவாக, மார்பக புற்றுநோய் (1,62,500 நோயாளிகள்), வாய்வழி புற்றுநோய் (1,20,000 நோயாளிகள்), கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (97,000 நோயாளிகள்), நுரையீரல் புற்றுநோய் (68,000 நோயாளிகள்), வயிற்று புற்றுநோய் (57,000) நோயாளிகள்), மற்றும் பெருங்குடல் புற்றுநோய் (57,000 நோயாளிகள்) ஆகிய ஆறு வகை புற்றுநோய்கள் காணப்படுகின்றன என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில், 49 சதவீதம் பேர் புதிய புற்றுநோயாளிகள் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆண்களில் 5.70 லட்சம் புதிய புற்றுநோய் நோயாளிகளில், வாய்ப் புற்றுநோய் (92,000), நுரையீரல் புற்றுநோய் (49,000), வயிற்று புற்றுநோய் (39,000), பெருங்குடல் புற்றுநோய் (37,000), உணவுக்குழாய் புற்றுநோய் (34,000) ஆகியவை 45 சதவீத நோயாளிகளாக பதிவாகியுள்ளனர். பெண்களில் 5.87 லட்சம் புதிய புற்றுநோய் நோயாளிகளில், மார்பக புற்றுநோய் (1,62,500), கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (97,000), கருப்பை புற்றுநோய் (36,000), வாய்ப் புற்றுநோய் (28,000), மற்றும் பெருங்குடல் புற்றுநோய் (20,000) ஆகியவை 60 சதவீத நோயாளிகள் என பதிவாகியுள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
ஆண்களில் உள்ள அனைத்து புற்றுநோய்களிலும் புகையிலை தொடர்பான புற்றுநோய்கள் 34-69 சதவிகிதம் ஆகும். மேலும், இது இந்தியாவின் பெரும்பாலான பிராந்தியங்களில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 10-27 சதவிகிதம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது.
நாற்பது முதல் எழுபது வயது ஆண்களிடையே வாய்ப் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாகக் காணப்படுகிறது. இது பான் மசாலா போன்ற பாக்குகளைக் கொண்ட கட்டுப்பாடற்ற சுவை கொண்ட மெல்லும் பொருட்களின் நுகர்வு அதிகரிப்பதன் விளைவாக இருக்கலாம். மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் பங்கஜ் சதுர்வேதி கூறுகையில், புகையிலையை கட்டுப்படுத்த மாநிலங்கள் புகைபிடிப்பதை தடை செய்யும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.