இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையத்தின் இளையோர் நீரிழிவு பதிவுகளின்படி, இந்தியாவில் 25 வயதுக்கு உட்பட்ட நான்கு பேரில் ஒருவர் டைப்-2 நீரிழிவு வகையின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கின்றனர்.
ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. எனவே, ரத்த சர்க்கரை அளவுகளின் வரம்புகளைப் புரிந்து கொள்வது நீரிழிவு நோயின் சுய நிர்வாகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
வயது, பாலினம் எதுவாக இருந்தாலும், காலையில் எவருக்கும் ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவு 100 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இருப்பினும், ஒவ்வொரு நபரின் ஆரோக்கியம் மற்றும் உடல் செயல்பாடு தனிப்பட்டதாக இருப்பதால், அவர்களின் ரத்த சர்க்கரை அளவு அவர்களின் உணவு, மருந்து மற்றும் பிற காரணிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
ரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது உயர் ரத்தச் சர்க்கரை, ப்ரீடயாபெடிக் மற்றும் நீரிழிவு நிலைகளுடன் தொடர்புடையது.
சாதாரண சர்க்கரை அளவு 90 முதல் 100 mg/dL வரை இருக்கும். இருப்பினும், பகல் மற்றும் இரவு நேரங்களில் இது அடிக்கடி மாறுகிறது. ஆனால் சில நேரங்களில், அதிக அல்லது குறைந்த ரத்த சர்க்கரை அளவுகள், மருத்துவ கவனிப்பு தேவைப்படும் சுகாதார நிலைமைகளின் அறிகுறிகளாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்த சர்க்கரை அளவுகளில் கூர்மையான ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் அவை அவர்களின் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக இருக்கும்.
பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பிற்கு வழிவகுக்கும் இதயப் பிரச்சனைகள் உட்பட, பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
சாப்பிட்ட பிறகு 2 நிமிடம் மெதுவான நடைபயிற்சி
/indian-express-tamil/media/media_files/CdevqMo8wrMbpaEzON9B.jpg)
ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியான ஒரு பகுப்பாய்வில், இரவு உணவுக்குப் பிறகு லேசான நடைபயிற்சி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டது.
எந்த நேரத்திலும் லேசான நடைபயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சாப்பிட்ட 60 முதல் 90 நிமிடங்களுக்குள் ஒரு சிறிய நடைப்பயிற்சி ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
நிற்பதையோ அல்லது உட்காருவதையோ விட இலகுவான நடைப்பயிற்சிக்கு தசைகளின் சுறுசுறுப்பான ஈடுபாடு அதிகம் தேவைப்படுகிறது. தசைகள் அதிகப்படியான குளுக்கோஸில் சிலவற்றை ஊறவைக்கின்றன, எனவே ரத்த சர்க்கரை அளவை சீராக கட்டுப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அறிகுறிகள் என்ன?
அதிக தாகம், இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்தல், அதீத மயக்கம், எந்த வித முயற்சியும் இன்றி எடை குறைதல், காலில் தொற்று ஏற்படுதல், மங்கலான பார்வை, மற்றும் காயங்கள் குணமடையாதது ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறிகள் என பிரிட்டிஷ் தேசிய சுகாதர சேவை அமைப்பு கூறுகிறது.
எனினும், இது போன்ற எந்த அறிகுறியும் இன்றியும் கூட நீரிழிவு நோய் நேரிட வாய்ப்புள்ளது.
குறைந்த ரத்தச் சர்க்கரை என்பது நீரிழிவு நோயின் மோசமான சிக்கல், அதிக நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதாலேயோ அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாததாலேயோ இந்தப் பிரச்சினை ஏற்படும்.
பொதுவாக, இரவில் தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இந்த நேரத்தில் உணவுக்கான நமது கிளைசெமிக் எதிர்வினை அதிகமாகவும் குறைவாகவும், சீரற்ற முறையில் இருக்கும்.
நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளான ஒருவர், மருந்துகளுடன் தகுந்த உணவு முறைகள், வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்துவது சிக்கலானது.
மேலும் இந்தியாவின் நீரிழிவு நோய் வழிகாட்டு முறைகளில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நீரிழிவு நோய் இருக்கிறதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“