உலக சுகாதார நிறுவனத்தால் நவம்பர் 14, "வேர்ல்ட் டயாபடீஸ் டே" நாளாக அறிவிக்கப்பட்டு, இந்த நாளில் நீரிழிவு மற்றும் சர்க்கரை நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் இயங்கி வரும் எஸ்.பி டயபட்டிக் ஃபவுண்டேசன் சார்பாக நீரிழிவு சர்க்கரை நோய் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடைபெற்றது. நீரிழிவு நோய் தீர்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்ற அடிப்படையில் இந்த சைக்கிள் பயணம் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய நீரிழிவு சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் சுகுணா, ”உலக அளவில் நீரிழிவு சக்கரை நோய் பாதிப்பு அதிகரித்திருக்கின்றன.
/indian-express-tamil/media/post_attachments/38b55cba-95d.jpg)
வயதானவர்களை பாதித்த இந்த நீரிழிவு நடுத்தர வயதுடையோர், இளைஞர் படாளத்தை கணிசமாக பாதித்தது. இந்த நிலையில் குழந்தைகளும் இந்த நோய்க்கு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். உலக அளவில் இது காமன் டிசீஸ் என்று சொல்லும் அளவுக்கு நீரிழிவு நோய் சமுதாயத்துக்கு மாறி இருக்கின்றன. இந்திய அளவில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றன. 50 சதவீதம் பேர் முறையான சிகிச்சை எடுக்க ஆரம்பிக்கின்றனர். சிகிச்சை எடுப்பவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உரிய மருந்துகளை உட்கொண்டும் மருத்துவர்கள் அறிவுரைகளையும் பின்பற்றுகின்றனர்.
வயதானவர்கள் வாலிபர்கள் மட்டுமின்றி தற்போது 7 முதல் 10 வயது குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் அதிகரித்திருக்கின்றன. டைப் 1 டயாபடீஸ் 10ல் 1 குழந்தைக்கு இருந்த நிலையில், தற்போது குழந்தைகளின் 10 சதவீதம் பேருக்கு டைப் 2 டயாபடீஸ் இருப்பதாக இன்டர்நேஷனல் டயாபடீஸ் ஃபெடரேஷன் அமைப்பின் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/f92a7891-b5e.jpg)
மனிதர்களுக்கு பொதுவாக நீரிழிவு நோயின் தாக்கம் ஆரம்பத்தில் பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அதன் வீரியம் அதிகமாகும் பொழுது, கண் குறைபாடு, கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகளில் ஆரம்பித்து சிறுநீரக மனித உடலுக்கு பிரச்சனை ஏற்படும் அளவுக்கு இதன் தாக்கம் இருக்கும். சமுதாயத்தில் மாறிவரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை நீரிழிவுக்கு அடிப்படை என்பதனால், துரித உணவை தவிர்த்து சரி விகித நிலையில் சத்தான உணவை உட்கொள்ளுதல், நல்ல உறக்கம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவதாக” தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“